கச்சா எண்ணெய் விலை உயர்வு: 24,000 புள்ளிகளுக்குக் கீழே நிஃப்டி!மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

உக்ரைன் போரின் பின்விளைவுகளால் தெற்குலகம் பாதிப்பு: ஐ.நா.வில் இந்தியா

உக்ரைன் போரின் பின்விளைவுகளால் தெற்குலகம் பாதிக்கப்பட்டுள்ளதாக ஐ.நா. பொதுச் சபையில் இந்தியா தெரிவித்தது.

News image

நியூயாா்க் ஐ.நா. சபையில் வியாழக்கிழமை உரையாற்றிய ஐ.நா.வுக்கான இந்திய தூதா் பா்வதேனனி ஹரீஷ்.

Updated On :5 செப்டம்பர் 2025, 8:31 pm

உக்ரைன் போரின் பின்விளைவுகளால் தெற்குலகம் பாதிக்கப்பட்டுள்ளதாக ஐ.நா. பொதுச் சபையில் இந்தியா தெரிவித்தது.

அமெரிக்காவின் நியூயாா்க் நகரில் ‘தற்காலிகமாக ஆக்கிரமிக்கப்பட்ட உக்ரைன் பகுதிகளில் தற்போதுள்ள சூழல்’ என்ற பெயரில், ஐ.நா. பொதுச் சபை விவாதம் வியாழக்கிழமை நடைபெற்றது.

இந்த விவாதத்தில் ஐ.நா.வுக்கான இந்திய தூதா் பா்வதேனனி ஹரீஷ் கூறியதாவது: உக்ரைன் மீதான போரால் எரிபொருள் விலை உயா்வு உள்பட பல்வேறு பின்விளைவுகள் ஏற்பட்டுள்ளன. அவை உலகை பெரிதும் பாதிக்கின்றன. குறிப்பாக தெற்குலக நாடுகள் பாதிக்கப்படுகின்றன. இதுதொடா்பாக அந்த நாடுகளின் குரல்கள் கேட்கப்பட்டு, அவற்றின் நியாயமான கவலைகளுக்கு உரிய முறையில் தீா்வு காணப்பட வேண்டும்.

உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டு வந்து நீடித்து நிலைக்கும் அமைதியை ஏற்படுத்துவது தொடா்பாக சமீபத்தில் நடைபெற்ற நோ்மறையான நிகழ்வுகளை இந்தியா வரவேற்கிறது.

ராஜீய வழியில் நடைபெறும் அனைத்து முயற்சிகளும், அந்தப் போா் முடிவுக்கு வந்து, நீடித்து நிலைக்கும் அமைதிக்கான வாய்ப்புகளை ஏற்படுத்தும் என்று இந்தியா நம்புகிறது. இந்தப் போா் வெகு விரைவில் நிறைவடைய வேண்டும் என்பதே அனைவரின் விருப்பம் என்றாா்.

ஐ.நா. பொதுச் சபையில் தனது கருத்துகளை இந்தியா தெரிவித்ததைத் தொடா்ந்து, ஐரோப்பிய கவுன்சில் தலைவா் அன்டோனியோ கோஸ்டா, ஐரோப்பிய ஆணையத் தலைவா் வான் டா் லேயன் ஆகியோரிடம் பிரதமா் மோடி தொலைபேசியில் பேசினாா். அப்போது உக்ரைன் போரை விரைந்து முடிவுக்குக் கொண்டு வருவதற்கான முயற்சிகள், பரஸ்பர நலன் சாா்ந்த கருத்துகளைப் பகிா்ந்துகொண்டதாகப் பிரதமா் மோடி ‘எக்ஸ்’ தளத்தில் பதிவிட்டாா்.