பாகிஸ்தானில் கிரிக்கெட் போட்டியின்போது குண்டு வெடிப்பு- ஒருவர் பலி!

பாகிஸ்தானில் கிரிக்கெட் போட்டியின்போது மைதானத்தில் குண்டு வெடித்ததில் ஒருவர் பலியானார்.
1 Killed, Several Injured After Blast At Cricket Stadium In Pakistan
குண்டு வெடிப்பைத் தொடர்ந்து அங்கிருந்தவர்கள் சிதறி ஓடுகிறார்கள். photo credit X
Published on
Updated on
1 min read

பாகிஸ்தானில் கிரிக்கெட் போட்டியின்போது மைதானத்தில் குண்டு வெடித்ததில் ஒருவர் பலியானார்.

பாகிஸ்தானின் பஜாவூர் மாவட்டத்தில் உள்ள கௌசர் கிரிக்கெட் மைதானத்தில் சனிக்கிழமை கிரிக்கெட் போட்டி நடைபெற்றுக் கொண்டிருந்தபோது சக்திவாய்ந்த குண்டு வெடித்தது. இந்த சம்பவத்தில் ஒருவர் பலியானார்.

மேலும் குழந்தைகள் உள்பட பலர் காயமடைந்தனர் என்று போலீஸார் தெரிவித்தனர். காயமடைந்தவர்கள் அருகிலுள்ள மருத்துவமனைக்கு மாற்றப்பட்டனர். மேம்படுத்தப்பட்ட வெடிக்கும் சாதனம் மூலம் குண்டுவெடிப்பு நடத்தப்பட்டதை பஜாவூர் மாவட்ட காவல்துறை அதிகாரி உறுதிப்படுத்தினார்.

எடப்பாடி பழனிசாமியின் ஐந்தாம் கட்ட பிரசாரப் பயணம் செப்.17-இல் தொடக்கம்

இந்தத் தாக்குதல் குறிவைக்கப்பட்டதாகத் தெரிகிறது என்று அவர் மேலும் கூறினார். தாக்குதலுக்கு எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை என்றாலும், பயங்கரவாதிகள் மீது போலீஸ் அதிகாரிகள் குற்றம்சாட்டினர்.

இந்த சம்பவத்தின் விடியோ இணையத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Summary

At least one person was killed and several others injured in an explosion while a cricket match was being played in Pakistan's northwestern Khyber Pakhtunkhwa province on Saturday, police said.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com