
உக்ரைனில் 800-க்கும் மேற்பட்ட ட்ரோன்கள் ஏவி ரஷியா ஞாயிற்றுக்கிழமை(செப். 7) தீவிர தாக்குதல் நடத்தியுள்ளது. உக்ரைனில் ரஷியா ராணுவ படையெடுப்பை தொடங்கி 3 ஆண்டுகளைக் கடந்துவிட்ட நிலையில், அதன்பின் நடத்தப்பட்டுள்ள மிகப்பெரியளவிலான வான்வழி தாக்குதலாக இன்றைய தாக்குதல் அமைந்துள்ளது.
உக்ரைன் தலைநகர் கீவ் மற்றும் இதர பகுதிகளில் 805 ட்ரோன்களை ஏவி தொடரப்பட்ட ரஷியாவின் இந்த தாக்குதல்களில் ஒரு சில முக்கிய அரசு கட்டடங்கள் சேதமடைந்திருப்பதாகவும், இந்த தாக்குதல்களில் இருவர் உயிரிழந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 13 வகையான ஏவுகணைகள் மூலமாகவும் உக்ரைனில் ரஷியா தாக்குதல் நடத்தியதாக உக்ரைன் விமானப்படை செய்தித்தொடர்பாளர் தெரிவித்தார். அவற்றில் 747 ட்ரோன்கள், 4 ஏவுகணைகள் வானிலேயே இடைமறித்து அழிக்கப்பட்டதாகவும் உக்ரைன் விமானப்படையால் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த மூன்றாண்டுகளைக் கடந்தும் நீடிக்கும் உக்ரைன் மீதான ரஷியாவின் போரால் எரிபொருள் விலை உயா்வு உள்பட பல்வேறு பின்விளைவுகள் ஏற்பட்டுள்ளன. அவை உலகை பெரிதும் பாதிக்கின்றன. குறிப்பாக தெற்குலக நாடுகள் பாதிக்கப்படுகின்றன என்ற கருத்தை ஐ.நா. பொதுச் சபை விவாதத்தில் இந்தியா முன் வைத்தது.
இந்த நிலையில், உக்ரைன் போரை விரைந்து முடிவுக்குக் கொண்டு வருவதற்கான முயற்சிகள் குறித்து இந்தியா - பிரான்ஸ் தலைவர்கள் சனிக்கிழமை(செப். 6) தொலைபேசி வழியாக ஆலோசனை நடத்தியிருந்ததும் குறிப்பிடத்தக்கது. இதனிடையே, ரஷியாவின் ட்ரோன் தாக்குதல் உலகளவில் கண்டனத்தை பெற்றுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.