
காங்கோவில் படகு கவிழ்ந்ததில் மாணவர்கள் உள்பட 86 பலியாகினர்.
காங்கோவின் ஈக்வேடார் மாகாணத்தில் மோட்டார் படகு புதன்கிழமை கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. பசன்குஷு பகுதியில் இந்த விபத்து நிகழ்ந்ததாகவும், இதில் 86 பேர் பலியானதாகவும் மாநில செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
மேலும் பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலோர் மாணவர்கள் என்று மாநில ஊடகங்கள் வெள்ளிக்கிழமை செய்தி வெளியிட்டுள்ளன.
விபத்துக்கான காரணம் உடனடியாகத் தெரியவில்லை. விதிமுறைக்கு மாறாக அதிக பேர் பயணித்தது, இரவில் படகை செலுத்துதியது ஆகியவையே விபத்திற்கு காரணம் என்று மாநில ஊடகங்கள் குற்றஞ்சாட்டியுள்ளன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.