சார்லி கிர்க் கொலை: குற்றவாளி பற்றித் தகவல் தந்தால் 1 லட்சம் டாலர்!

சார்லி கிர்க்கைக் கொலை செய்தவர் குறித்த தகவலுக்கு ஒரு லட்சம் டாலர் வழங்குவதாக அமெரிக்க அரசு அறிவிப்பு
சார்லி கிர்க் கொலை: குற்றவாளி பற்றித் தகவல் தந்தால் 1 லட்சம் டாலர்!
Published on
Updated on
1 min read

அமெரிக்காவில் திருப்புமுனை என்ற அமைப்பின் நிறுவனரான சார்லி கிர்க்கை கொலை செய்தவர் குறித்த தகவலுக்கு ஒரு லட்சம் டாலர் வழங்குவதாக அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.

அமெரிக்க அதிபர் டிரம்ப்பின் தீவிர ஆதரவாளரும் திருப்புமுனை என்ற அமைப்பின் நிறுவனருமான சார்லி கிர்க்கின் படுகொலை சம்பவத்தில் சம்பந்தப்பட்ட குற்றவாளி குறித்து தகவல் தெரிவிப்பவருக்கு ஒரு லட்சம் டாலர் (சுமார் ரூ.88.3 லட்சம்) சன்மானம் வழங்கப்படும் என்று எஃப்பிஐ (FBI) அறிவித்துள்ளது.

மேலும், கொலை செய்ததாகக் சந்தேகப்படும்படியான ஒருவரின் படத்தையும் எஃப்பிஐ வெளியிட்டுள்ளது.

கல்லூரி மாணவர்போலத் தோற்றமளிக்கும் ஒருவர், அமெரிக்க கொடி வரையப்பட்ட சட்டை அணிந்துகொண்டு, தொப்பி மற்றும் கண் கண்ணாடியுடன் பை ஒன்றையும் அணிந்தவாறு சிசிடிவி காட்சிகளில் பதிவாகியுள்ளார்.

அவர்தான் குற்றச் சம்பவத்தில் ஈடுபட்டிருக்கக் கூடும் என்று சந்தேகிக்கப்படும் நிலையில், அவர் குறித்து தகவல் அளிப்பவருக்கு சன்மானம் வழங்குவதாக எஃப்பிஐ அறிவித்துள்ளது.

இதையும் படிக்க: சார்லி கிர்க் கொலையாளி! வெளியானது புதிய விடியோ!

Summary

FBI release photos of suspect in Charlie Kirk assassination

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com