சண்டை அல்லது மரணம்! பிரிட்டனில் புலம்பெயர்ந்தோருக்கு எதிராக 1.5 லட்சம் பேர் போராட்டம்!

பிரிட்டனில் புலம்பெயர்ந்தோருக்கு எதிராக ஒன்றரை லட்சம் பேர் சேர்ந்து மாபெரும் பேரணி
பிரிட்டனில் போராட்டம்
பிரிட்டனில் போராட்டம்AP
Published on
Updated on
1 min read

பிரிட்டனில் புலம்பெயர்வுக்கு எதிராக ஒன்றரை லட்சம் பேர் சேர்ந்து மாபெரும் பேரணி நடத்தியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

லண்டனில் புலம்பெயர்ந்தோருக்கு எதிராக அந்நாட்டினர் மாபெரும் போராட்டத்தை சனிக்கிழமையில் முன்னெடுத்தனர்.

தீவிர வலதுசாரி ஆதரவாளரான டாமி ராபின்சன் (42) தலைமையில் நடைபெற்ற இந்தப் பேரணியில் சுமார் ஒன்றரை லட்சத்துக்கும் அதிகமானோர் கலந்து கொண்டனர்.

AP

இந்தப் பேரணியில் ஈடுபட்ட சிலர், காவல்துறையினர் மீது தாக்குதலும் நடத்தினர். கூட்டத்துக்குள் இருந்து காவல்துறையினர் மீது பாட்டில்களை வீசியதில், 26 பேர் காயமடைந்தனர். இதனைத் தொடர்ந்து, அமைதியைச் சீர்குலைத்தல், வன்முறை, தாக்குதல் உள்ளிட்ட குற்றச்சாட்டுகளில் 25 பேர் கைது செய்யப்பட்டனர்.

புலம்பெயர்ந்தோருக்கு எதிரான இந்தப் பேரணியைக் குறிப்பிட்டுப் பேசிய டெஸ்லா நிறுவனர் எலான் மஸ்க், கெய்ர் ஸ்டார்மர் தலைமையிலான பிரிட்டன் அரசைக் கலைக்க வேண்டும் என்று கூறினார்.

போராட்டக்காரர்களுடன் விடியோ அழைப்பில் பேசிய எலான் மஸ்க், ``நீங்கள் வன்முறையைத் தேர்ந்தெடுத்தாலும் இல்லாவிட்டாலும், வன்முறை உங்களைத் தேடி வருகிறது.

நீங்கள் எதிர்த்துப் போராட வேண்டும் அல்லது நீங்கள் இறந்துவிட வேண்டும். அதுதான் உண்மை என்று நினைக்கிறேன் என்று தெரிவித்தார்.

மேலும், கட்டுப்பாடற்ற புலம்பெயர்வு பிரிட்டனை அழித்து விடும் என்றும் அவர் எச்சரித்தார்.

இதையும் படிக்க: பார்வையிழந்த மனைவிக்கு வாழ்நாள் சத்தியம்! அன்புக் கணவருக்கு குவியும் பாராட்டுகள்!

Summary

Tommy Robinson's Unite the Kingdom rally in London

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com