
கத்தாரில் இஸ்ரேல் படைகள் கடந்த வாரம் நடத்திய தாக்குதலுக்கு கடும் கண்டனம் தெரிவித்து, அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் குறித்து விவாதிக்க 50-க்கும் மேற்பட்ட முஸ்லிம் நாடுகள் பங்கற்கும் அவசர ஆலோசனை கூட்டம் கத்தார் தலைநகர் தோஹாவில் இன்று (செப். 15) நடைபெறுகிறது.
பாகிஸ்தான் உள்பட 57 உறுப்பினர்களை உள்ளடக்கிய அரபு லீக் மற்றும் இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பை சார்ந்த நாடுகளும் இதில் பங்கேற்பதாக கூறப்படுகிறது. இதற்காக பாகிஸ்தான் பிரதமர் ஷேபாச் ஷரீஃப் இன்று தோஹா சென்றடைந்தார்.
இன்றைய சந்திப்புக்கு முன், கத்தார் பிரதமர் ஷேக் முகமது பின் அப்துல்ரஹ்மான் பின் ஜஸ்ஸிம் அல் தாணி தலைமையில் ஞாயிற்றுக்கிழமை(செப். 14) நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் அரபு லீக் மற்றும் இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பு நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் கலந்துகொண்டது குறிப்பிடத்தக்கது.
இதனிடையே, அதே நாளில் அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மார்கோ ரூபியோ இஸ்ரேலுக்குச் சென்று இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவை ஜெருசலேமில் சந்தித்துப் பேசியுள்ளார். அப்போது ஹமாஸ் படைக்கு எதிரான இஸ்ரேலின் ரானுவ நடவடிக்கைகளுக்கு அமெரிக்கா முழு ஆதரவளிப்பதை மீண்டுமொருமுறை வலியுறுத்தியுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.