உக்ரைன் மீது 115 ட்ரோன்கள் மூலம் ரஷியா தாக்குதல்! 2 பேர் பலி!

உக்ரைன் மீது ரஷியா நடத்திய வான்வழித் தாக்குதல்கள் குறித்து...
உக்ரைன் மீது 3 ஏவுகணைகள் மற்றும் 115 ட்ரோன்கள் மூலம் ரஷியா வான்வழித் தாக்குதல் நடத்தியுள்ளது...
உக்ரைன் மீது 3 ஏவுகணைகள் மற்றும் 115 ட்ரோன்கள் மூலம் ரஷியா வான்வழித் தாக்குதல் நடத்தியுள்ளது...ஏபி
Published on
Updated on
1 min read

உக்ரைன் மீது ரஷியா நடத்திய வான்வழித் தாக்குதல்களில் 2 பேர் கொல்லப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரஷியா தலைநகர் மாஸ்கோவின் மீது உக்ரைன், நேற்று (செப். 22) நள்ளிரவு ட்ரோன்கள் மூலம் வான்வழித் தாக்குதல்கள் நடத்தியது. அதேவேளையில், உக்ரைனின் முக்கிய நகரங்களின் மீது ரஷியா ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்கள் மூலம் நடத்திய தாக்குதல்களில் 2 பேர் கொல்லப்பட்டனர்.

உக்ரைனின் தெற்கு ஜபோரிஜியா மாகாணம் மற்றும் கடற்கரை நகரமான ஒடேசா பகுதியின் மீதும் ரஷியா, சுமார் 3 ஏவுகணைகள் மற்றும் 115 ட்ரோன்கள் மூலம் தாக்குதல் நடத்தியதாக, உக்ரைன் விமானப் படை தெரிவித்துள்ளது.

இந்தத் தாக்குதல்களில் ஈடுபட்ட ஏராளமான ட்ரோன்கள் தகர்க்கப்பட்டதாகவும், சர்வதேச நாடுகள் தங்களுக்கு அதிகப்படியான வான் பாதுகாப்பு அமைப்புகளை வழங்கவேண்டுமெனவும், உக்ரைன் பிரதமர் யூலியா ஸ்வைரிடென்கோ வலியுறுத்தியுள்ளார்.

நியூயார்க் நகரத்துக்குச் சென்றுள்ள உக்ரைன் அதிபர் வொலோதிமீர் ஸெலன்ஸ்கி, கடந்த 3 ஆண்டுகளுக்கும் மேலாக நடைபெற்று வரும் ரஷியா உடனான போரை முடிவுக்குக் கொண்டு வருவது குறித்து அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்புடன் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க: காஸாவுக்கு ஆதரவாக இத்தாலியில் வெடித்த போராட்டம்!

Summary

Two people have reportedly been killed in Russian airstrikes on Ukraine.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com