ஹெச்-1பி விசா கட்டண உயர்வு நடைமுறையில் மருத்துவர்களுக்கு விலக்கு?!

அமெரிக்காவின் ஹெச்-1பி விசா கட்டண உயர்வு நடைமுறையில் மருத்துவர்களுக்கு விலக்கு அளிக்கப்படவுள்ளதைப் பற்றி...
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்...
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்... ஏபி
Published on
Updated on
1 min read

ஹெச்-1பி விசாவுக்கான கட்டணம் உயர்த்தப்பட்டுள்ள நிலையில், இந்த நடைமுறையில் மருத்துவர்களுக்கு விலக்கு அளிக்கப்படவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

அமெரிக்காவின் ஹெச்-1பி விசா கட்டணத்தை ரூ.1.47 லட்சத்தில் இருந்து ரூ.88 லட்சமாக உயர்த்தும் உத்தரவில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கடந்த வெள்ளிக்கிழமை கையொப்பமிட்டார்.

இது அமெரிக்காவில் தகவல் தொழில்நுட்பத் துறையில் பணியாற்றும் இந்தியர்களுக்கு பேரிடியாக விழுந்தது.

மேலும், வெளிநாடுகளில் இருந்து அமெரிக்காவில் ஹெச்-1பி விசா பெற்று பணியாற்றும் ஒரு பணியாளருக்கு ஓராண்டுக்கு ரூ.88 லட்சம் கட்டணத்தை அவரைப் பணியமர்த்தும் நிறுவனங்கள் செலுத்த வேண்டும் என வா்த்தகத் துறை அமைச்சர் ஹோவர்டு லுட்னிக் தெரிவித்திருந்தார்.

அதைத்தொடர்ந்து ஏற்கனவே ஹெச்-1பி விசா வைத்திருப்போர் அல்லது புதுப்பிப்பவர்களுக்கு இந்த கட்டண உயர்வு பொருந்தாது எனவும் இது ஒருமுறை மட்டுமே செலுத்தும் கட்டணம் எனவும் அமெரிக்க அரசு சனிக்கிழமை விளக்கமளித்தது.

இந்த நிலையில், அமெரிக்காவிற்கு வரும் மருத்துவர்களுக்கு ஹெச்1-பி விசா கட்டண உயர்வில் இருந்து விலக்கு அளிக்க முடிவெடுக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதுகுறித்து வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் டெய்லர் ரோஜர்ஸ் கூறுகையில், “அதிபர் டிரம்ப்பின் விசா கட்டண உயர்வில் சில விலக்குகள் அளிக்கப்படவுள்ளன. அதில், மருத்துவர்கள் மற்றும் மருத்துவப் பணியாளர்கள் அடங்குவார்கள்” எனத் தெரிவித்தார்.

ஹெச்-1பி விசா கட்டண உயர்வு அமெரிக்காவின் மருத்துவத்துறையைக் கடுமையாகப் பாதிக்கும் என்ற கருத்துகள் எழுந்த நிலையில், இந்த முடிவு எடுக்கப்பட்டிருப்பதாகவும் தகவலறிந்த வட்டாரங்கள் கூறுகின்றன. இருப்பினும், இதற்கான அதிகாரபூர்வ அறிவிப்புகள் வெளியாகவில்லை.

அமெரிக்காவில் சுமார் 7 கோடிக்கும் அதிகமான மக்கள் மருத்துவர்களின் பற்றாக்குறையால் பாதிக்கப்படுவதாக ஃபெடரலின் தரவுகள் தெரிவிக்கின்றன.

மேயோவில் மட்டும் 300-க்கும் மேற்பட்ட மருத்துவப் பணியாளர்களுக்கான அங்கீகரிக்கப்பட்ட விசாக்கள் உள்ளன. இதனால், கட்டண உயர்வு பணியாளர்களை மட்டுமின்றி, மக்களையும் கடுமையாகப் பாதிக்கக்கூடும் என்பதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Summary

US may exempt doctors from $100,000 H-1B visa fee: Report

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com