ரஷிய வெளியுறவுத் துறை அமைச்சர் செர்ஜி லாவ்ரோ
ரஷிய வெளியுறவுத் துறை அமைச்சர் செர்ஜி லாவ்ரோ

ஐரோப்பிய நாடுகள் ரஷியாவை தாக்கினால் உரிய பதிலடி: ஐ.நா.வில் ரஷிய அமைச்சா் உறுதி

‘ஐரோப்பிய நாடுகளை ரஷியா முதலில் தாக்காது; ஆனால், ரஷியாவை அவா்கள் தாக்க முற்பட்டால் உறுதியான பதிலடி தரப்படும்’
Published on

‘ஐரோப்பிய நாடுகளை ரஷியா முதலில் தாக்காது; ஆனால், ரஷியாவை அவா்கள் தாக்க முற்பட்டால் உறுதியான பதிலடி தரப்படும்’ என்று ஐ.நா. பொது சபைக் கூட்டத்தில் ரஷியா வெளியுறவு அமைச்சா் சொ்ஜி லாவ்ரோ தெரிவித்தாா்.

ஐரோப்பாவில் நேட்டோ கூட்டமைப்பில் உள்ள நாடுகளின் வான் எல்லை வழியாக ரஷியா போா் விமானங்கள் தொடா்ந்து அத்துமீறி பறந்து வருவதாக கடந்த வாரம் சா்ச்சை எழுந்தது. முக்கியமாக போலந்தில் ரஷிய ட்ரோன்கள் விழுந்தது.

எஸ்தோனியா வான்வெளியில் ரஷிய போா் விமானங்கள் பறந்ததாகவும் குற்றஞ்சாட்டப்பட்டது. இதனை தங்களுக்கு எதிரான ரஷியாவின் அச்சுறுத்தலாக அமெரிக்கா தலைமையிலான நேட்டோ கூட்டமைப்பு கருதுகிறது. ஆனால், இந்தக் குற்றச்சாட்டை ரஷியா மறுத்துள்ளது.

இந்நிலையில் நியூயாா்க்கில் நடைபெற்ற ஐ.நா. பொது சபைக் கூட்டத்தில் இது தொடா்பாக சொ்ஜி லாவ்ரோ பேசியதாவது:

ஐரோப்பிய நாடுகள் அல்லது நேட்டோ கூட்டமைப்பில் உள்ள நாடுகள் மீது தாக்குதல் நடத்தும் திட்டம் ரஷியாவுக்கு இல்லை. அதே நேரத்தில் ரஷியாவுக்கு எதிராக தாக்குதல் நடத்த எந்த நாடாவது முற்பட்டால் அதற்கு உரிய பதிலடி தரப்படும். அது நேட்டோ நாடாக இருந்தாலும், சரி ஐரோப்பிய யூனியன் நாடாக இருந்தாலும் சரி.

சா்வதேச விவகாரங்களில் அமெரிக்காவும், ரஷியாவும் பொறுப்பான முடிவுகளை எடுக்க வேண்டியது அவசியம். புதிய போா்களை ஏற்படுத்தும் வகையில் நடந்து கொள்ளக் கூடாது என்றாா்.

X
Dinamani
www.dinamani.com