
இஸ்ரேல் உடனான போர் நிறுத்தம் தொடர்பான 20 அம்ச பரிந்துரைகளுக்கு பதிலளிக்க காஸாவுக்கு 3 - 4 நாள்களை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அவகாசமாக அளித்துள்ளார்.
போர் நிறுத்த ஒப்பந்தம், ஹமாஸின் ஆயுதக் குறைப்பு, ஹமாஸ் தரப்பிலுள்ள பிணைக் கைதிகளை விடுவிப்பது போன்றவற்றிற்கு ஹமாஸ் ஒப்புக்கொண்டால் காஸாவிலுள்ள இஸ்ரேல் வீரர்கள் படிப்படியாக திரும்பப் பெறப்படுவார்கள் என பரிந்துரைகளில் கூறப்பட்டுள்ளது.
இஸ்ரேல் - காஸா இடையே இரு ஆண்டுகளுக்கும் மேலாக நடைபெற்று வரும் போரை முடிவுக்கு கொண்டுவருவதற்கான முயற்சிகளில் அமெரிக்கா ஈடுபட்டு வருகிறது.
உலக நாடுகளிடையே நடைபெற்ற 7 போரை நிறுத்தியுள்ளதாகக் கூறும் டிரம்ப், தற்போது இஸ்ரேல் - காஸா போரை நிறுத்துவதற்கான முயற்சியாக, இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு உடன் வெள்ளை மாளிகையில் நேற்று பேச்சுவார்த்தை நடத்தினார். இதில் சாதகமான முடிவு எட்டப்பட்டுள்ளதாக வெள்ளை மாளிகை அறிவித்திருந்தது.
காஸா போர் நிறுத்தத்துக்காக டிரம்ப்பால் முன்மொழியப்பட்ட முக்கியமான 20 நிபந்தனைகள் அடங்கிய திட்டத்தை இஸ்ரேல் ஏற்றுக்கொண்டது. இதனிடையே ஹமாஸும் இது தொடர்பாக பதிலளிக்க 3 - 4 நாள்களை டிரம்ப் அவகாசமாக அளித்துள்ளார்.
வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களுடன் இது தொடர்பாக டிரம்ப் பேசியதாவது,
போர் நிறுத்த பரிந்துரைகள் தொடர்பாக ஆலோசித்து பதிலளிக்க ஹமாஸுக்கு 3 - 4 நாள்கள் அவகாசம் அளிக்கிறேன். இந்த விவகாரத்தில் தொடர்புடைய மற்ற தரப்பினரும் பரிந்துரைகளுக்கு ஒப்புதல் தெரிவித்ததால், ஹமாஸின் பதிலுக்காக அவர்கள் காத்திருக்கின்றனர்.
அரபு நாடுகள் கூட இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன. முஸ்லிம் நாடுகளும் கையெழுத்திட்டுள்ளன. ஹமாஸ் அமைப்பின் பதிலுக்காக காத்திருக்கிறோம். ஹமாஸ் இதற்கு ஒப்புதல் தெரிவிக்கலாம் அல்லது மறுக்கலாம். அப்படி மறுத்தால், இதன் முடிவு மிகவும் சோகமானதாக இருக்கும் எனத் தெரிவித்தார்.
பாலஸ்தீன ஆதரவு பெற்ற ஹமாஸ் கிளர்ச்சிப் படையினருக்கு அரசியல் மற்றும் ராணுவ தலைமை என உள்நாட்டிற்குள்ளும் வெளிநாடுகளில் உள்ள ஆதரவு அமைப்புகளுடனும் ஆலோசித்து இந்த விவகாரத்தில் முடிவு எடுக்கும் என்றும் இதில் பல சிக்கல்கள் உள்ளய்தால், ஹமாஸ் தரப்பிலிருந்து பதிலளிக்க சில நாள்கள் ஆகும் என அந்நாட்டு ஊடகங்கள் குறிப்பிடுகின்றன.
இதையும் படிக்க | காஸாவுக்கான டிரம்ப்பின் அமைதித் திட்டம் சாத்தியமா? அறிந்து கொள்ள வேண்டியவை என்ன?
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.