அமெரிக்க ராணுவத்தின் தலைமைத் தளபதி ராண்டி ஜார்ஜ் தனது பதவியை ராஜிநாமா செய்யுமாறு அந்நாட்டின் பாதுகாப்பு அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.
அமெரிக்க ராணுவத்தின் தலைமைத் தளபதியாக, கடந்த 2023 ஆம் ஆண்டு முன்னாள் அதிபர் ஜோ பைடனால் ராண்டி ஜார்ஜ் நியமிக்கப்பட்டார். இதன்மூலம், அந்நாட்டு சட்டங்களின்படி 4 ஆண்டுகளுக்கு அவர் ராணுவ தலைமைத் தளபதியாகப் பதவி வகிப்பார் எனக் கூறப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, ஈரான் மீதான அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் போரால், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் நிர்வாகத்தின் மீது பல்வேறு விமர்சனங்கள் எழுந்துள்ளன. மேலும், அமெரிக்க அரசுக்கு எதிராக மக்கள் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில், அமெரிக்க பாதுகாப்பு அமைச்சர் பீட்டர் ஹெக்சத் கடந்த வியாழக்கிழமை (ஏப். 2) ராணுவத் தளபதி ராண்டி ஜார்ஜை பதவி விலக உத்தரவிட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மூத்த இராணுவ அதிகாரிகளின் பதவி உயர்வு குறித்து இருவருக்கும் இடையிலான கருத்து வேறுபாடுகளால் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாகக் கூறப்படுகிறது.
இதனால், தலைமைத் துணைத் தளபதி கிறிஸ்டோபர் சி. லானீவ் தற்காலிகமாக ராணுவத் தலைமைத் தளபதியாகப் பதவி வகிப்பார் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
முன்னதாக, அதிபா் டிரம்ப் நிா்வாகத்தில் அரசு தலைமை வழக்குரைஞராக (அட்டா்னி ஜெனரல்) இருந்த பாம் போண்டி அப்பதவியில் இருந்து விலகுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
Summary
U.S. Army Chief of Staff Randy George to resign from his post.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

அமெரிக்க படையில் ஒருவர் கூட உயிர் பிழைக்க மாட்டார்! - ஈரானிய தலைமைத் தளபதி எச்சரிக்கை!

ஈரானிய துணை ராணுவப் படையின் தலைமைத் தளபதி கொலை! - இஸ்ரேல் அறிவிப்பு!
போர்க் கூட்டணி? பாக். ராணுவத் தலைமைத் தளபதியுடன் சௌதி பாதுகாப்பு அமைச்சர் சந்திப்பு!

ஈரான் போர்! பிரான்ஸின் மத்திய கிழக்கு ராணுவத் தளங்களில் அமெரிக்காவுக்கு அனுமதி!
வீடியோக்கள்

DINAMANI வார ராசிபலன்! | Apr. 12 முதல் Apr. 18 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு

தில்லியை வென்று நம்பிக்கையைப் பெறுமா சிஎஸ்கே? | CSK v DC Match Preview |
தினமணி செய்திச் சேவை

LIK Movie Review | தீமா.. தீமா.. தேறுமா! | Pradeep Ranganathan | Vignesh Shivan | krithi shetty
தினமணி செய்திச் சேவை

புதுச்சேரி & கேரளத்தில் வாக்குப்பதிவு நிறைவு! வாக்குப்பதிவில் நடந்த சுவாரசியங்கள்!
தினமணி செய்திச் சேவை


