சென்னையிலிருந்து வார இறுதியில் வெளியூர் செல்ல திட்டமா? மாணவர் பாரதிதாசன் கண்ணீர் விடியோ! சமூக நீதி நாளில் இப்படி ஒரு அநீதி - உதயநிதி2027-ஆம் ஆண்டுக்கான சிபிஎஸ்இ 10, 12ஆம் வகுப்புத் தேர்வு அட்டவணை! டாடா குழுமத் தலைவராக சந்திரசேகரன் தொடர்வார்! முடிவை மாற்றிய நிர்வாகக் குழு!இன்று கல்வி, நாளை வேறாக இருக்கலாம்! மனநிலையை மாற்ற தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் அறிவுரை!நவோதயா பள்ளிகளுக்கு இடங்கள் தேர்வு செய்ய தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு!மதுரை எய்ம்ஸ் புறநோயாளிகள் பிரிவு ஜனவரி 1 முதல் தொடக்கம்! பெரியார் பிறந்த நாள்: மு.க. ஸ்டாலின் மரியாதை! சமூகநீதி நாள் உறுதிமொழி ஏற்பு!சமூக ஏற்றத்தாழ்வுகளுக்கு எதிராக வாழ்ந்தவர் பெரியார்! அண்ணாமலை புகழாரம்!முன்னாள் மத்திய அமைச்சர் சுதர்சன நாச்சியப்பன் காலமானார்!

அமெரிக்க கடற்படையின் முற்றுகை தொடர்ந்தால் செங்கடலை முடக்குவோம்! - ஈரான் எச்சரிக்கை!

செங்கடல் பகுதியை முழுவதுமாக முடக்குவோம் என ஈரான் ராணுவம் எச்சரிக்கை விடுத்துள்ளது...

Red Sea

செங்கடல் பகுதியை முழுவதுமாக முடக்குவோம் என ஈரான் எச்சரிக்கை... - கோப்புப் படம்

Published On :

ஹோர்முஸ் நீரிணையில் அமெரிக்க கடற்படையின் முற்றுகை தொடர்ந்தால், செங்கடல் பகுதியை முழுவதுமாக முடக்குவோம் என ஈரான் ராணுவம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

பாகிஸ்தான் தலைமையில் இஸ்லாமாபாதில் நடைபெற்ற ஈரான் மற்றும் அமெரிக்கா இடையிலான முதற்கட்ட அமைதிப் பேச்சுவார்த்தைகள் தோல்வியில் முடிந்தன. இதனால், கடந்த ஏப். 13 அன்று முதல் ஈரானின் துறைமுகம் மற்றும் ஹோர்முஸ் நீரிணை பகுதியில் அமெரிக்க கடற்படை முற்றுகையிட்டு வருகிறது.

இந்த நிலையில், ஈரானின் வர்த்தகம் மற்றும் எண்ணெய்க் கப்பல்களை அமெரிக்க கடற்படை முடக்குவது, போர்நிறுத்தத்தை மீறியதாகக் கருதப்படும் என ஈரான் ராணுவம் புதன்கிழமை (ஏப். 15) அன்று அறிவித்துள்ளது.

இதுபற்றி, ஈரான் ராணுவத்தின் மூத்த அதிகாரி அலி அப்துல்லாஹி கூறியதாவது:

“ஈரான் ராணுவம் நாட்டின் இறையான்மையையும், நலன்களையும் பாதுகாக்கத் தீர்க்கமாகச் செயல்படும். இந்த முற்றுகைகள் தொடர்ந்தால், பாரசீக வளைகுடா, ஓமன் கடல் மற்றும் செங்கடல் பகுதிகளில் எவ்வித ஏற்றுமதி மற்றும் இறக்குமதிகளை இஸ்லாமியக் குடியரசின் வலிமைமிக்க ஆயுதப் படைகள் அனுமதிக்காது” எனத் தெரிவித்துள்ளார்.

முன்னதாக, அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் கூட்டுத் தாக்குதலுக்குப் பதிலடியாக வளைகுடா நாடுகளின் முக்கிய கட்டமைப்புகள் மீது ஈரானின் படைகள் தாக்குதல் நடத்தி வந்தன.

ஏற்கெனவே, காஸா மீதான போரைக் கண்டித்து செங்கடல் வழியாகச் சென்ற இஸ்ரேலிய மற்றும் அமெரிக்க கப்பல்களைக் குறிவைத்து ஈரானின் ஆதரவு பெற்ற யேமனின் ஹவுதி கிளர்ச்சிப் படையினர் தாக்குதல் நடத்தியது குறிப்பிடத்தக்கது.

Summary

Iran's military has warned that if the U.S. Navy's blockade continues, they will completely cripple the Red Sea region.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.