காங்கிரஸ் முன்னாள் எம்எல்ஏ 3 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிடத் தடை!எதிர்திசையில் வாகனம் ஓட்டுபவரா? திறந்தது மூன்றாம் கண்! டாஸ்மாக் ஊழியர்கள் போராட்டத்துக்குக் காரணம் திமுக - அதிமுகதான்: அமைச்சர் விக்னேஷ் பேச்சுமேட்டூரிலிருந்து காவிரி நீர் கல்லணை வந்தது! நாளை காலை திறப்பு!நேபாள பெருவெள்ளம்! தஞ்சையில் மரபணு சேகரிப்பு பணி தொடக்கம்!!தவெக ஆதரவு கட்சிகள் கூட்டம்: காங்கிரஸுக்கு நேரில் அழைப்பு விடுத்த அமைச்சர்கள்!உத்தர பிரதேச வெள்ளம்: 26 மாவட்டங்கள் பாதிப்பு - 17,500 போ் மீட்புமாவட்ட நீதிபதிகளின் ஓய்வு வயது 62: தமிழ்நாடு உள்பட 7 மாநிலங்கள் ஒப்புதல்396 ஆசிரியா்களுக்கு டாக்டா் ராதாகிருஷ்ணன் விருது: அமைச்சா் ராஜ்மோகன் இன்று வழங்குகிறாா்நிலக்கரியில் இருந்து வாயுக்களைப் பிரித்தெடுக்கும் திட்டம்: ஒப்பந்தப்புள்ளி கோராத நிறுவனங்கள்ரயில் நிலையங்களின் வருவாய் பட்டியல்: சென்ட்ரலுக்கு 3-ஆவது இடம்!

ஹோர்முஸ் நீரிணை: சீன, ஈரான் வெளியுறவு அமைச்சர்கள் தொலைபேசியில் உரையாடல்!

ஹோர்முஸ் நீரிணை விவகாரம் குறித்து சீன, ஈரான் வெளியுறவு அமைச்சர்கள் தொலைபேசியில் உரையாடியது தொடர்பாக...

Wang Yi, Abbas Araqchi

வாங் யி, அப்பாஸ் அராக்சி - AP

Published On :16 ஏப்ரல் 2026, 1:22 pm IST

ஹோர்முஸ் நீரிணை விவகாரம் தொடர்பாக சீன, ஈரான் வெளியுறவு அமைச்சர்கள் புதன்கிழமை (ஏப்.15) தொலைபேசி வாயிலாக உரையாடினர்.

ஈரான் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சியுடன் உரையாடிய சீனாவின் வெளியுறவு அமைச்சர் வாங் யி, “ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் திறப்பது ஒரு சர்வதேச கோரிக்கை ஆகும்.

மேலும், ஹோர்முஸ் நீரிணை விவகாரத்தில் ஈரானின் இறையாண்மை, பாதுகாப்பு மற்றும் சட்டப்பூர்வ உரிமைகள் மதிக்கப்பட வேண்டும். ஆனால் ஹோர்முஸ் வழியாக மேற்கொள்ளப்படும் கப்பல் போக்குவரத்தின் சுதந்திரமும் பாதுகாப்பும் உறுதி செய்யப்பட வேண்டும்” என்று வாங் யி, அப்பாஸ் அராக்சியிடம் தெரிவித்தார்.

இதுகுறித்து வெளியான அறிக்கை ஒன்றில், ”நீரிணையின் இயல்பான போக்குவரத்தை மீண்டும் தொடங்க வேண்டும் என்பதுதான் சர்வதேச அமைப்புகளின் ஒருமித்த அழைப்பாக இருக்கிறது.

தற்போதைய நிலைமை போருக்கும் அமைதிக்கும் இடையிலான ஒரு நெருக்கடியான காலகட்டத்தை எட்டியுள்ளது. இதனால், அமைதிக்கான வாய்ப்பு உருவாகி வருகிறது” என்று குறிப்பிட்டிருந்தார்.

ஈரான் - இஸ்ரேல், அமெரிக்கா இடையே கடந்த பிப்.28 ஆம் தேதி தொடங்கிய போர் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் நிலையில் அந்தப் போரை முடிவுக்குக் கொண்டுவர பாகிஸ்தான் தொடர்ந்து மத்தியஸ்தம் செய்துவருகிறது. இதன் ஒருபகுதியாக இஸ்லாமாபாதில் நடந்த பேச்சுவார்த்தை தோல்வியடைந்தது. இதனால் பாகிஸ்தான் அடுத்த கட்ட பேச்சுவார்த்தைகளை மேற்கொள்வதற்காக தீவிர முயற்சிகளை செய்து வருகிறது.

முன்னதாக அமெரிக்க தலைநகர் வாஷிங்டனில் லெபனான்-இஸ்ரேல் இடையே செவ்வாய்க்கிழமை (ஏப்.13) நடந்த பேச்சுவார்த்தை எவ்வித உடன்பாடும் இன்றி நிறைவடைந்தது குறிப்பிடத்தக்கது.

Summary

The Foreign Ministers of China and Iran held a telephone conversation on Wednesday (April 15) regarding the Strait of Hormuz issue.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.