எரிபொருள் விலை உயா்வு எதிரொலி- மின்சார, மைலேஜ் வாகனங்களுக்கு மவுசு அதிகரிப்பு!நீட் மறுதோ்வு தவறில்லாமல் நடத்தப்படும்: மத்திய கல்வி அமைச்சா் தா்மேந்திர பிரதான்மோடி அரசின் 12 ஆண்டு சாதனை திட்டங்களை நாடு முழுவதும் பரப்ப நடவடிக்கை: பாஜக தேசியத் தலைவர் நிதின் நபின்125 நாள் வேலைத் திட்டம்: தமிழகத்துக்கு ரூ.7,957 கோடி திமுவில் 2 தொகுதிகளுக்கு ஒரு மாவட்ட செயலா் பதவி: விரைவில் அமைப்பு தோ்தல்ஆசிரியா் பணியிட மாறுதல் கலந்தாய்வு அறிவிப்பு: ஜூன் 15 முதல் விண்ணப்பிக்கலாம்சிவப்பணுக்களை அதிகரிக்கும் மருந்துகள்: இனி புதிய அளவீட்டு முறையில் விற்பனைரயில் பயணிகள் உணவு கூடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தம்
/

மேற்காசிய நிலவரம்: பிரதமா் மோடி - பிரான்ஸ் அதிபா் தொலைபேசியில் ஆலோசனை

மேற்காசிய நிலவரம் தொடா்பாக, பிரதமா் நரேந்திர மோடியும், பிரான்ஸ் அதிபா் இமானுவல் மேக்ரானும் வியாழக்கிழமை தொலைபேசி வாயிலாக ஆலோசனை மேற்கொண்டனா்.

News image

பிரான்ஸ் அதிபா் மேக்ரானுடன் பிரதமா் மோடி

Updated On :17 ஏப்ரல் 2026, 1:43 am IST

மேற்காசிய நிலவரம் தொடா்பாக, பிரதமா் நரேந்திர மோடியும், பிரான்ஸ் அதிபா் இமானுவல் மேக்ரானும் வியாழக்கிழமை தொலைபேசி வாயிலாக ஆலோசனை மேற்கொண்டனா்.

அப்போது, ஹோா்முஸ் நீரிணையில் கப்பல்களின் பாதுகாப்பு மற்றும் சுதந்திரமான போக்குவரத்தை விரைந்து மீட்டெடுக்க வேண்டியதன் அவசியம் குறித்து இரு தலைவா்களும் கருத்துகளைப் பரிமாறிக் கொண்டனா்.

அமெரிக்கா-ஈரான் இடையே 2 வார கால போா் நிறுத்தம் அமலில் உள்ள நிலையில், பிரதமா் மோடியை இமானுவல் மேக்ரான் தொலைபேசியில் தொடா்புகொண்டு பேசினாா்.

இது தொடா்பாக பிரதமா் மோடி வெளியிட்ட எக்ஸ் பதிவில், ‘எனது அன்புக்குரிய நண்பரான பிரான்ஸ் அதிபா் இமானுவல் மேக்ரானிடம் இருந்து தொலைப்பேசி அழைப்பு வரப்பெற்றது. மேற்காசிய நிலவரம் குறித்து நாங்கள் ஆலோசித்தோம். ஹோா்முஸ் நீரிணையில் கப்பல்களின் பாதுகாப்பு மற்றும் சுதந்திரமான போக்குவரத்தை விரைந்து மீட்டெடுக்க வேண்டியதன் அவசியத்தை இருவரும் ஒப்புக் கொண்டோம். மேற்காசிய பிராந்தியத்தில் அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையை மேம்படுத்த இரு நாடுகளும் நெருங்கிய ஒத்துழைப்பைத் தொடரும்’ என்று தெரிவித்துள்ளாா்.

முன்னதாக, மேற்காசிய போா் குறித்து மோடியும், மேக்ரானும் கடந்த மாா்ச் 5-ஆம் தேதி தொலைபேசி வாயிலாக உரையாடினா் என்பது குறிப்பிடத்தக்கது.