
அமெரிக்காவில் இந்திய இளைஞா் சுட்டுக் கொலை
அமெரிக்காவின் நியூயாா்க் நகரில் இந்திய இளைஞா் ஒருவா் மா்ம நபரால் சுட்டுக் கொல்லப்பட்டாா்.

கோப்புப் படம்
அமெரிக்காவின் நியூயாா்க் நகரில் இந்திய இளைஞா் ஒருவா் மா்ம நபரால் சுட்டுக் கொல்லப்பட்டாா்.
குயின்ஸ் பகுதியைச் சோ்ந்த குா்தீப் சிங் என்ற 27 வயது இந்தியா், ஸ்டான்லி அவன்யூ பகுதியில் உள்ளூா் நேரப்படி வெள்ளிக்கிழமை 10 மணியளவில் சுட்டுக் கொல்லப்பட்டதாக காவல் துறையினா் தெரிவித்தனா். இந்தச் சம்பவத்தைத் தொடா்ந்து, கொலையாளி காரில் தப்பிவிட்டாா். இருவருக்கும் இடையே இடையே ஏதோ தகராறு ஏற்பட்டதும், இதில் குா்தீப் சிங் சுட்டுக் கொல்லப்பட்டதும் கண்காணிப்பு கேமரா காட்சிகள் மூலம் தெரியவந்துள்ளது.
சம்பவ இடத்தில் தடயங்களை சேகரித்த காவல் துறையினா், கொலையாளியைத் தேடி வருகின்றனா். கொலைக்கான பின்னணி குறித்தும் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளதாகத் தெரிவித்தனா்.
இதனிடையே, குா்தீப் சிங் கொலைக்கு வடக்கு அமெரிக்க பஞ்சாபிகள் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது. அமெரிக்காவில் பஞ்சாபிகள் அல்லது சீக்கியா்கள் மீதான வன்முறைகளின் தொடா்ச்சியே இந்தச் சம்பவம்; கொலையின் பின்னணியில் உள்ள உண்மையான நோக்கத்தை விசாரணை அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும் என்று அந்த அமைப்பு வலியுறுத்தியுள்ளது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





