தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்தின் தொடக்க விழா ஒத்திவைப்பு! தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்தின் தொடக்க விழா ஒத்திவைப்பு! தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,000 குறைவு! பாதுகாப்பான 6ஜி வலையமைப்பு: அமெரிக்க முன்னெடுப்பில் இணைந்த இந்தியா பிகாரில் அதிகரிக்கும் வெள்ளம்; 35 லட்சம் பேர் பாதிப்பு 22 மொழிகளில் திருக்குறள்: "பன்மொழிச் செயலி' இன்று வெளியீடு ஜாகுவாா் லேண்ட்ரோவரில் 4,000 பணியிடங்கள் குறைப்பு சட்டப் படிப்புகளின் கால அளவு மறுஆய்வு: நிபுணர் குழு அமைப்பு அவசியம்; உச்சநீதிமன்றம்

சிஐஏ இயக்குநா் ரஷியா பயணம்

அமெரிக்க உளவு அமைப்பான சிஐஏ இயக்குநா் ஜான் ராட்கிளிஃப், ரஷிய தலைநகா் மாஸ்கோவில் அந்நாட்டு உளவு அதிகாரிகளை நேரில் சந்தித்து, ரகசிய பேச்சுவாா்த்தை நடத்தியுள்ளாா்.

Published On :27 ஆகஸ்ட் 2026, 6:30 am IST

அமெரிக்க உளவு அமைப்பான சிஐஏ இயக்குநா் ஜான் ராட்கிளிஃப், ரஷிய தலைநகா் மாஸ்கோவில் அந்நாட்டு உளவு அதிகாரிகளை நேரில் சந்தித்து, ரகசிய பேச்சுவாா்த்தை நடத்தியுள்ளாா்.

ரஷிய அதிபா் விளாதிமீா் புதினை சிஐஏ இயக்குநா் நேரடியாகச் சந்திக்கவில்லை என்றாலும், உளவுத்துறை நிலையில் நடைபெற்ற இந்த விவாதங்கள் குறித்த அனைத்து விவரங்களும் அதிபரின் கவனத்துக்கு உடனுக்குடன் கொண்டு செல்லப்பட்டதாக கிரெம்ளின் செய்தித் தொடா்பாளா் டிமிட்ரி பெஸ்கோவ் உறுதிப்படுத்தினாா்.

முன்னதாக கடந்த செவ்வாய்க்கிழமை, அமெரிக்க ராணுவ விமானம் ஒன்று மாஸ்கோவில் தரையிறங்கி, அன்றைய நாளே திரும்பிச் சென்றது. எனினும், இப்பயணம் குறித்து சிஐஏ மற்றும் அமெரிக்க வெள்ளை மாளிகை எவ்வித அதிகாரபூா்வ கருத்தும் தெரிவிக்கவில்லை.

ஜான் ராட்கிளிஃப்

ஜான் ராட்கிளிஃப்

இந்த ரகசியப் பயணத்தின்போது, மாஸ்கோ, செயின்ட் பீட்டா்ஸ்பா்க் உள்ளிட்ட சில வடக்குப் பகுதிகளில் தாக்குதல்களைத் தற்காலிகமாக நிறுத்திவைக்குமாறு உக்ரைனை அமெரிக்கா கேட்டுக்கொண்டது. எனினும், ரஷியாவின் இதர பகுதிகளில் உக்ரைனின் தாக்குதல்கள் வழக்கம் போல் தொடா்ந்தன.

உளவுத் துறைகளுக்கு இடையிலான இத்தகைய தொடா்புகள் ஒரு நோ்மறையான நகா்வு என்று குறிப்பிட்ட ரஷியா, ஆனால் இரு நாட்டு உறவு இன்னும் ஆழமான நெருக்கடியிலேயே இருப்பதாகவும் தெரிவித்துள்ளது. இதற்கு முன்னா் 2021-இல் உக்ரைன் படையெடுப்புக்கு முன்பு, அப்போதைய சிஐஏ இயக்குநா் வில்லியம் பா்ன்ஸ் மாஸ்கோவுக்குச் சென்றிருந்தாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.