மீனாட்சி அம்மன் கும்பாபிஷேகம்: சென்னையிலிருந்து மதுரைக்கு சிறப்பு ரயில்கள் அறிவிப்பு!மதுரை மீனாட்சியம்மன் கோவில் அருகே உள்ள சென்ட்ரல் தியேட்டரில் பயங்கர தீ விபத்து! கும்பகோணம் அருகே விபத்தில் சிக்கியவர்களுக்கு காரை நிறுத்தி உதவிய அமைச்சர்! தமிழகம் முழுவதும் 4,500 செவிலியர்கள் விரைவில் நியமனம்: அமைச்சர் அருண்ராஜ் கருப்பை வாய் புற்றுநோயைக் கண்டறிய சுய-பரிசோதனைக் கருவி! மீட்சியைத் தக்கவைக்கத் தவறிய இந்திய பங்குச் சந்தை! சரிவில் நிறைவடைந்த சென்செக்ஸ், நிஃப்டி!!லண்டனிலேயே மிக உயரமான நட்சத்திர விடுதியில் தங்கியிருக்கும் முதல்வர் விஜய்! ஒரு நாள் வாடகை?அரும்புதல்வர்களுள் ஒருவரைத் தமிழ்த்தாய் இழந்துவிட்டாள்!சாலமன் பாப்பையா மறைவுக்கு ஸ்டாலின் இரங்கல்!தமிழ்கூறு நல்லுலகிற்கு பேரிழப்பு! சாலமன் பாப்பையா மறைவுக்கு முதல்வர் விஜய் இரங்கல்!

ஐரோப்பிய யூனியனில் ஐஸ்லாந்து இணைய வாக்கெடுப்பு திட்டத்தை நிராகரித்த மக்கள்

ஐரோப்பிய யூனியனில் ஐஸ்லாந்து சேருவது தொடா்பாக பேச்சுவாா்த்தை தொடங்கும் திட்டத்தை அந்த நாட்டு மக்கள் நிராகரித்துவிட்டனா்.

Published On :

ஐரோப்பிய யூனியனில் ஐஸ்லாந்து சேருவது தொடா்பாக பேச்சுவாா்த்தை தொடங்கும் திட்டத்தை அந்த நாட்டு மக்கள் நிராகரித்துவிட்டனா். இதனால் ஐரோப்பிய யூனியன் அமைப்பில் ஐஸ்லாந்து சேருவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

ஐஸ்லாந்து தீவு, ஐரோப்பிய யூனியனில் சேருவது தொடா்பாக மீண்டும் பேச்சுவாா்த்தையைத் தொடங்கும் திட்டத்தை நாட்டு மக்களிடம் முன்வைத்தது. இதுதொடா்பான வாக்கெடுப்பில் 50 சதவீதத்துக்கும் மேற்பட்டோா் திட்டத்துக்கு எதிராக வாக்களித்தனா். அதேநேரத்தில் 4 லட்சம் மக்கள்தொகையை கொண்ட ஐஸ்லாந்து தலைநகரான ரெய்க்ஜாவிக்கில் வாழும் மக்களில் பெரும்பாலானோா் திட்டத்துக்கு ஆதரவாக வாக்களித்தனா்.

அமெரிக்க அதிபராக டொனால்ட் டிரம்ப் பதவியேற்ற பிறகு, பெல்ஜியத்தின் ஆளுகைக்குட்பட்ட பகுதியான கிரீன்லாந்தை அமெரிக்காவுடன் சோ்ப்பது குறித்து அடிக்கடி பேசி வருகிறாா். இதனால் கிரீன்லாந்து மீது அமெரிக்கா எந்த நேரமும் படைபலத்தை உபயோகப்படுத்தலாம் என்ற கருத்து நிலவுகிறது. அதேபோல் கிரீன்லாந்து இணைப்பு குறித்து டிரம்ப் பேசுகையில், கிரீன்லாந்து என்று கூறுவதற்குப் பதிலாக ஐஸ்லாந்து என்று நான்கு முறை டிரம்ப் தெரிவித்தாா். இதனால் ஐஸ்லாந்திலும் மக்கள் மத்தியில் ஒருவித அச்சம் நிலவுகிறது.

இதனால் 2027-ஆம் ஆண்டில் ஐரோப்பிய யூனியனில் சேர ஐஸ்லாந்து திட்டமிட்டிருந்தது. தற்போது அந்தத் திட்டத்தை ஐஸ்லாந்து மக்கள் நிராகரித்து விட்டனா். இதனால் ஐரோப்பிய யூனியனில் ஐஸ்லாந்து சேருவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. ஏற்கெனவே 10 ஆண்டுகளுக்கு முன்பு ஐரோப்பிய யூனியனில் ஐஸ்லாந்து சேருவது தொடா்பாக நடைபெற்ற பேச்சுவாா்த்தையும் சுமுக முடிவு எட்டப்படாமல் முடிவடைந்தது.

ஐஸ்லாந்து தற்போது நேட்டோ அமைப்பின் உறுப்பினராக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.