கொலம்பியா நாட்டின் அதிபர் குஸ்தாவோ பெட்ரோ அமெரிக்காவுக்குச் செல்வதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வெனிசுவேலா அதிபர் நிகோலஸ் மதுரோ மற்றும் அவரது மனைவியை அதிரடியாகத் தாக்குதல் நடத்தி அமெரிக்கா சிறைப்பிடித்தது. போதைப் பொருள் கடத்தல் விவகாரத்தில் அமெரிக்க நீதிமன்றத்தில் வெனிசுவேலா அதிபரின் வழக்கு விசாரிக்கப்படும் எனக் கூறப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து, அமெரிக்காவுக்குள் போதைப் பொருள் கடத்தலில் ஈடுபட்டு வருவதாக கொலம்பியா அதிபர் குஸ்தாவோ பெட்ரோவின் மீது குற்றம்சாட்டிய அதிபர் டொனால்ட் டிரம்ப் அந்நாட்டின் மீது ராணுவ நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மிரட்டல் விடுத்திருந்தார்.
இந்தக் குற்றச்சாட்டுகளால், அதிபர் பெட்ரோ, அவரது குடும்பத்தினர் மற்றும் கொலம்பியாவின் அரசு அதிகாரிகளின் மீது தடை விதிப்பதாக டிரம்ப்பின் நிர்வாகம் கடந்த 2025 அக்டோபரில் அறிவித்திருந்தது.
இந்த நிலையில், அரசு முறைப் பயணமாக இன்று (பிப். 3) அமெரிக்காவுக்குச் செல்லும் கொலம்பியா அதிபர் குஸ்தாவோ பெட்ரோ வாஷிங்டனில் உள்ள வெள்ளை மாளிகையில் அதிபர் டிரம்ப்பை நேரில் சந்தித்து முக்கிய பேச்சுவார்த்தைகளை நடத்தவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து, அதிபர் டிரம்ப் கூறுகையில், வெனிசுவேலா தாக்குதலுக்குப் பிறகு அவர் (அதிபர் குஸ்தாவோ பெட்ரோ) மிகவும் நல்லவராக நடந்து கொள்கிறார்” எனக் கூறியுள்ளார்.
முன்னதாக, இடதுசாரி கொள்கைகளுடைய அதிபர் குஸ்தாவோ காஸா, வெனிசுவேலா விவகாரங்களில், அதிபர் டிரம்ப்பின் நிர்வாகத்தின் நடவடிக்கைகள் அனைத்தையும் கடுமையாக விமர்சித்து வந்தார். இந்தச் சூழலில், அமெரிக்கா மற்றும் கொலம்பியா அதிபர்கள் இடையிலான சந்திப்பு சர்வதேச அளவில் கவனம் பெற்றுள்ளது.
Summary
It has been reported that Colombian President Gustavo Petro is traveling to the United States.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.









