பேரவையில் கடந்த காலத்தைப்பற்றியே விஜய் பேசுவது ஏன்? அன்புமணி கேள்விஉருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி! செப். 19 முதல் மழைக்கு வாய்ப்பு!பிலிகுண்டுலுவுக்கு 14 ஆயிரம் கன அடியாக நீர்வரத்து அதிகரிப்புஅக்டோபர் 11-ல் முதல்வர் விஜய்யின் வாழ்க்கை வரலாற்றுப் புத்தகத்தை வெளியிடுகிறேன் - மதுரை ஆதீனம் நவோதயா பள்ளிகளுக்கு இடங்கள் தேர்வு செய்ய தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு!2027-ஆம் ஆண்டுக்கான சிபிஎஸ்இ 10, 12ஆம் வகுப்புத் தேர்வு அட்டவணை! மாணவர் பாரதிதாசன் கண்ணீர் விடியோ! சமூக நீதி நாளில் இப்படி ஒரு அநீதி - உதயநிதி

ஜப்பானில் கடும் பனிப்பொழிவு! 30 பேர் பலி, 100 பேர் படுகாயம்

ஜப்பானில் 40 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கடும் பனிப்பொழிவு நிலவுவது குறித்து...

snowfall in Japan

பனிப்பொழிவால் பாதிக்கப்பட்ட சாலைப்போக்குவரத்து - படம் - ஏபி

Published On :

ஜப்பானில் வரலாறு காணாத வகையில் கடும் பனிப்பொழிவு நிலவி வருகிறது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.

பனிப்புயலில் நிலவிய குளிரில் சிக்கி இதுவரை 30 பேர் வரை உயிரிழந்துள்ளதாகவும், 100க்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அந்நாட்டு சுகாதாரத் துறை குறிப்பிட்டுள்ளது.

ஜப்பானின் அமோர் நகரில் 40 ஆண்டுகள் இல்லாத அளவுக்கு பனிப்பொழிந்து, 2 மீட்டர் உயரத்துக்கு படிந்துள்ளது.

வடக்கு ஜப்பானின் ஹொக்கைடோ நகரத்தில் இருந்து சப்போரா வரை சாலைகளில் படிந்துள்ள பனியை அகற்றும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இப்பணிகளில் ஊழியர்களுடன் ராணுவத்தினரும் ஈடுபட்டுள்ளனர்.

பனிப்பொழிவால் ஹொக்கைடோவின் விமான நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டது. ரயில் சேவைகளும் தாமதமாகின. முக்கிய சாலைகளில் பனி படர்ந்துள்ளதால் தரை வழிப் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது.

ஜப்பானில் கடந்த ஜனவரி 20ஆம் தேதி முதல் பனிப்பொழிவு மற்றும் அது தொடர்பான நிகழ்வுகளினால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

பனிகளை அகற்றும்போது பனிக்கட்டிகள் விழுந்து சிலர் படுகாயம் அடைந்துள்ளனர். கூரைகளில் இருந்து விழும் பனிக்கட்டிகளாலும் மக்கள் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருவதாக அந்நாட்டு பேரிடர் மேலாண்மை நிறுவனம் தெரிவித்துள்ளது.

Summary

Unprecedented snowfall in Japan 30 dead, over 100 seriously injured

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.