பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் சென்னை மாநகராட்சி உணவகங்களுக்கு 2 வாரத்துக்கான சமையல் எரிவாயு இருப்புதென் கடலோர மாவட்டங்களில் மாா்ச் 16 வரை மழைக்கு வாய்ப்புதோ்தல் ஆணையரைப் பதவி நீக்க தீா்மானம்: நாடாளுமன்றத்தில் நோட்டீஸ் தாக்கல் செய்ய எதிா்க்கட்சிகள் திட்டம்சட்டப் பாடங்களை இறுதி செய்ய நிபுணா் குழு - மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவுபணப் புழக்கத்தை அதிகரிக்க ரூ.50,000 கோடிக்கு அரசுப் பத்திரங்களை வாங்கும் ரிசா்வ் வங்கி - நாளை ஏலம்பட்டுக்கோட்டையில் வெறிநாய் கடித்து எஸ்எஸ்எல்சி மாணவிகள் 6 போ் உள்பட 20 போ் காயம்: முதலுதவிக்குப் பின் பொதுத்தோ்வு எழுதினா்சுகாதார ஆய்வாளா்கள் நியமனம்: தமிழக அரசுக்கு அனுமதி வழங்கி உத்தரவு
/

பாகிஸ்தான் மசூதியில் தற்கொலைப் படைத் தாக்குதலுக்கு டேஷ் பொறுப்பேற்பு!

பாகிஸ்தானில் 36 பேர் பலியான தற்கொலைப் படைத் தாக்குதலுக்கு டேஷின் கிளை அமைப்பு பொறுப்பேற்பு

News image
தாக்குதலில் பலியானோருக்கு பொதுமக்கள் அஞ்சலி- ஏபி
Updated On :7 பிப்ரவரி 2026, 2:05 pm

இணையதளச் செய்திப் பிரிவு

பாகிஸ்தானில் 36 பேர் பலியான தற்கொலைப் படைத் தாக்குதலுக்கு டேஷின் கிளை அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.

பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாதில் உள்ள ஷியா மசூதியில் வெள்ளிக்கிழமை தொழுகையின்போது, வெடிகுண்டு மூலம் தற்கொலைப் படைத் தாக்குதல் நடத்தப்பட்டது. இந்தத் தாக்குதலில் 36 பேர் பலியான நிலையில், 160-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

இதனைத் தொடர்ந்து, தாக்குதலுக்கு மூளையாகச் செயல்பட்டவர் என்று கூறப்படுபவர் உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த நிலையில், ஷியா மசூதியில் நடத்தப்பட்ட தாக்குதலுக்கு டேஷ் அமைப்பின் கிளை அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.

மேலும், தற்கொலைப் படைத் தாக்குதலில் ஈடுபட்டவராக 32 வயதான யாசிர் என்பவர் அடையாளம் காணப்படுகிறார்.

மசூதியின் வாயிலில் தன்னைத் தடுத்த பாதுகாப்புப் படையினரைத் தாக்கிவிட்டு, மசூதியின் உள்சென்று, யாசிர் குண்டுவெடிப்பு நடத்தியதாகக் கூறப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.