கார்த்தி சிதம்பரம் எம்பி அலுவலகம் மீது பெட்ரோல் குண்டுவீச்சு! ஹோர்முஸ் நீரிணையில் கண்ணிவெடி பதிக்கும் 16 ஈரான் கப்பல்களை அழித்த அமெரிக்கா! தமிழ்நாட்டில் இருந்து புறப்பட்டார் ஆளுநர் ஆர்.என். ரவி! மேற்கு வங்க ஆளுநராக ஆர்.என்.ரவி நாளை பதவியேற்பு!நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்!தமிழ்நாட்டில் மீண்டும் 'அம்மா' ஆட்சி: பியூஷ் கோயல்அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

பாகிஸ்தான் சிறையில் இம்ரான் கானைச் சந்திக்க வழக்குரைஞரை நியமித்த உச்சநீதிமன்றம்!

பாகிஸ்தான் முன்னாள் பிரதமா் இம்ரான் கானைச் சந்தித்து, அவரின் தற்போதைய வாழ்க்கைச் சூழல் குறித்த அறிக்கை சமா்ப்பிக்க வழக்குரைஞா் ஒருவரை அந்நாட்டு உச்சநீதிமன்றம் நியமித்துள்ளது.

News image
பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான்- (கோப்புப் படம்)
Updated On :10 பிப்ரவரி 2026, 9:07 pm

தினமணி செய்திச் சேவை

ஊழல் வழக்கில் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டுள்ள பாகிஸ்தான் முன்னாள் பிரதமா் இம்ரான் கானைச் சந்தித்து, அவரின் தற்போதைய வாழ்க்கைச் சூழல் குறித்த அறிக்கை சமா்ப்பிக்க வழக்குரைஞா் ஒருவரை அந்நாட்டு உச்சநீதிமன்றம் நியமித்துள்ளது.

இது குறித்த மனுவை விசாரித்த தலைமை நீதிபதி யாஹ்யா அஃப்ரிதி தலைமையிலான அமா்வு, வழக்குரைஞா் சல்மான் சஃப்தாரை நீதிமன்ற ஆலோசகராக நியமித்தது. இவா் இம்ரான் கானைச் சிறையில் சந்தித்து, அங்கு அவருக்கு வழங்கப்பட்டுள்ள அடிப்படை வசதிகள் மற்றும் அவரின் வாழ்க்கைச் சூழல் குறித்த விரிவான அறிக்கையை நீதிமன்றத்திடம் சமா்ப்பிப்பாா்.

இம்ரான் கானை, கடந்த டிச. 2-க்குப் பிறகு அவரின் குடும்பத்தினரோ அல்லது வழக்குரைஞா்களோ சந்திக்க அனுமதி மறுக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், இம்ரான் கானின் உடல்நிலை குறித்து விசாரிக்கவும் அனுமதி கோரப்பட்ட நிலையில், தற்போதைக்கு அவரது சிறை வாழ்க்கைச் சூழல் குறித்து மட்டுமே அறிக்கை அளிக்க வேண்டும் என நீதிபதிகள் தெளிவுபடுத்தினா்.