கராச்சி(பாகிஸ்தான்): கராச்சியின் வெவ்வேறு பகுதிகளில் புதன்கிழமை இரவு நடந்த நான்கு தனித்தனி துப்பாக்கிச் சூடு சம்பவங்களில் நான்கு பேர் பலியாகினர் மற்றும் ஐந்து பேர் காயமடைந்தனர் என்று காவல்துறை வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
பாகிஸ்தானின் கராச்சியில் மேமன் கோத் பகுதியில், அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் இரண்டு பேர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் இரண்டு ஆண்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர் மற்றும் ஒரு பெண் காயமடைந்தார்.
தகவலறிந்து அங்கு வந்த காவல்துறையினர் காயமடைந்த பெண் அந்த பகுதி நெடுஞ்சாலையில் உள்ள ஒரு தனியார் வீட்டுவசதி சங்கத்திற்கு அருகிலுள்ள ஒரு புதர் பகுதியில் இருந்து மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
சம்பவம் நடந்த இடத்தில் இருந்து பல 9 மி.மீ புல்லட் குண்டுகள் மற்றும் காலி மது பாட்டில்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேபோன்று தில்லி காலனியில் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் மூன்று பேர் காயமடைந்ததாக கூறப்படுகிறது. இந்த துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
முன்னதாக, பிப்ரவரி 11 ஆம் தேதி ஸ்வாட்டில் குழந்தைகளிடையே ஏற்பட்ட தகராறால் ஏற்பட்ட வன்முறை மோதலில் ஒருவர் கொல்லப்பட்டார், ஏழு பேர் காயமடைந்தனர்.
இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணையைத் தொடங்கியுள்ளனர், மேலும் மோதலின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.
Summary
At least four people died and five others injured in four separate firing incidents in different parts of Karachi on Wednesday night, police sources...
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
பில்லிங் தொடா்பான தகராறில் துப்பாக்கிச் சூடு: 2 போ் கைது
தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு: விசாரணை ஆணைய பரிந்துரைகளை அமல்படுத்த கோரிக்கை!
துப்பாக்கிச்சூடு வழக்கில் தலைமறைவான இருவா் கைது

மேற்கு வங்கம்: பாஜக வேட்பாளர் இல்லத்திற்கு வெளியே நடந்த துப்பாக்கிச் சூட்டில் வீரர் காயம்
விடியோக்கள்

சன்ரைசர்ஸ் vs ராஜஸ்தான்: எலிமினேட்டரில் களம் யாருக்குச் சாதகம்? | SRH vs RR | Klaasen |

தொண்டர்களுக்கு திருமா வைத்த வேண்டுகோள்! | VCK | DMK | TVK

5 ஆவது முறையாக உயர்ந்த Petrol விலை! புலம்பும் மக்கள்! | Oil | People's View | Petrol Price Hike




