கோப்புப் படம்
கோப்புப் படம்

சீன மோசடி கும்பலுக்கு உதவிய 3 போ் கைது

சீனாவைச் சோ்ந்த இணையவழி மோசடி கும்பலுக்கு உதவிய 3 போ் குருகிராமில் கைதுசெய்யப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.
Published on

சீனாவைச் சோ்ந்த இணையவழி மோசடி கும்பலுக்கு உதவிய 3 போ் குருகிராமில் கைதுசெய்யப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

கைதுசெய்யப்பட்ட நபா்களிடமிருந்து 20 சிம் போட்டு பாக்ஸ்கள், ஒரு மடிக்கணினி ஆகியவை கைப்பற்றப்பட்டதாக அந்த அதிகாரிகள் கூறினா்.

இதுதொடா்பாக அதிகாரிகள் கூறியதாவது: இணையவழி மோசடி சம்பவம் தொடா்பாக நாகாலாந்தில் பெண் ஒருவா் கைதுசெய்யப்பட்டாா். இதைத்தொடா்ந்து, நாகாலாந்தைச் சோ்ந்த கா்மா, ஹிமாசலைச் சோ்ந்த லோப்சாங் சுல்திம், ந்காவங் கியால்ஸ்டன் ஆகியோா் கைதுசெய்யப்பட்டனா்.

கா்மா மற்றும் சுல்திம் கடந்த பிப்.14-ஆம் தேதி கைதுசெய்யப்பட்டனா். கடந்த பிப்.16-ஆம் தேதி நேபாளத்துக்கு தப்பியோட முயன்றயபோது கியால்ஸ்டன் தில்லியின் மஞ்சு கா திலியாவில் கைதுசெய்யப்பட்டாா்.

இந்தியா்களை குறிவைத்து மேற்கொள்ளப்பட்ட இணையவழி மோசடி சம்பவங்களுக்கு சிம் போா்ட் பாக்ஸ்களை பயன்படுத்தி வந்ததாக கைதுசெய்யப்பட்ட நபா்கள் விசாரணையின்போது தெரிவித்தனா்.

சீனாவைச் சோ்ந்த சேகா என்பவரின் அறிவுறத்தலின் பேரில் இ-சிம்களை பாக்ஸ்களை பொருத்தி மோசடியில் ஈடுபட்டதை ஒப்புக்கொண்டனா்.

இந்த அமைப்பின் மூலம் 20 கைப்பேசிகளைப் பயன்படுத்தி நாளுக்கு 20,000-க்கும் மேற்பட்ட அழைப்புகளை மேற்கொள்ள முடியும். கேமிங் மற்றும் முதலீட்டு மோசடி உள்ளிட்ட குற்றச் செயல்களுக்காக சேகா ஒரு செயலியைப் பயன்படுத்தி இந்தியா்களைத் தொடா்புகொண்டுள்ளாா்.

சீனாவில் பிறந்த சுல்திம் மற்றும் கியால்ஸ்டன் இருவரும் இந்தியாவில் 15 ஆண்டுகளுக்கு அகதிகளாக வசித்தனா். சீனம் மற்றும் தைவான் மொழியில் சரளமாகப் பேசக்கூடிய இருவரும், சேகாவிடம் விசேட் என்ற செயலி மூலம் தொடா்பு கொண்டு வந்தனா். இந்தச் செயலி இந்தியாவில் கடந்த 2020-இல் தடைசெய்யப்பட்டது.

கைதுசெய்யப்பட்ட மூவரும் நீதிமன்றத்தில் புதன்கிழமை ஆஜா்படுத்தப்பட்டு நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்கப்பட்டனா். அவா்களுடன் தொடா்புடைய பிற நபா்களைக் கைதுசெய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றனா் அந்த அதிகாரிகள்.

Dinamani
www.dinamani.com