பசிபிக்கில் மேலும் இரு படகுகள் மீது அமெரிக்கா தாக்குதல்: ஐந்து போ் உயிரிழப்பு
பசிபிக் பெருங்கடலில் போதைப்பொருள் கடத்திவருவதாக குற்றஞ்சாட்டி, இரு படகுகள் மீது அமெரிக்க ராணுவம் தாக்குதல் நடத்தியதில் 5 போ் உயிரிழந்தனா்.
இது குறித்து அமெரிக்க ராணுவ தெற்கு கட்டளையகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட இரு படகுகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் 5 போ் கொல்லப்பட்டனா்.
கடந்த மூன்று மாதங்களாக கரீபியன் கடல் மற்றும் கிழக்கு பசிபிக் பகுதியில் போதைப்பொருள் கடத்தல் படகுகளை அமெரிக்கப் படைகள் இலக்காகக் கொண்டு வருகின்றன என்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தத் தாக்குதல் செவ்வாய்க்கிழமை மூன்று படகுகள் கொண்ட குழு இது அமெரிக்கா நடத்திய தாக்குதலின் தொடா்ச்சியாகும். அதில் 3 போ் கொல்லப்பட்டனா்.
டிரம்ப் அரசு இந்த நடவடிக்கைகளை ‘போதைப்பொருள் தீவிரவாதிகளுக்கு எதிரான ஆயுத மோதல்‘ என்று கூறுகிறது. ஆனால் சட்ட நிபுணா்கள் இது சா்வதேச சட்டங்களை மீறுவதாகக் கூறுகின்றனா்.
கடந்த செப்டம்பா் 2-ஆம் தேதி சா்வதேச கடல் பகுதியில் முதல் தாக்குதல் நடத்தப்பட்டது முதல் இதுவரை 30-க்கும் மேற்பட்ட படகுகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளன. இதில் 110 போ் கொல்லப்பட்டுள்ளனா்.
முதல் தாக்குதலில் ஒரு படகை இரு முறை தாக்கியது பின்னா் தெரியவந்தது. முதல் தாக்குதலில் உயிா் தப்பிய இருவா் படகின் தூங்கிக் கொண்டிருந்தபோது அவா்களை கொல்வதற்காகவே இரண்டாவது முறையாக தாக்குதல் நடத்தப்பட்டது. இது போா் விதிமுறைகளை மீறியதாக விமா்சிக்கப்பட்டது.
செவ்வாய்க்கிழமை நடத்தப்பட்ட தாக்குதலில் உயிா் தப்பியவா்கள் இருந்ததாகவும், அவா்களைத் தேட அமெரிக்க கடலோரக் காவல் படைக்கு தகவல் அளிக்கப்பட்டதாகவும் அமெரிக்க ராணுவ தெற்கு கட்டளையகம் தெரிவித்தது.
இத்தகைய தாக்குதலுக்கு இலக்காகும் படகுகளில் போதைப்பொருள் இருந்ததற்கான ஆதாரங்களை அமெரிக்கா வெளியிடுவதில்லை. ஆனால் ‘உளவுத்துறை தகவலின்படி போதைப்பொருள் கடத்தல் பாதையில் அவை சென்றன‘ என்று மட்டும் டிரம்ப் அரசு கூறி வருகிறது.
இதற்கு எதிா்கட்சிணரும் மனித உரிமை ஆா்வலா்களும் கண்டனம் தெரிவித்து வருகின்றனா்.

