

அரிசோனாவின் மலைப்பகுதியில் தனியார் ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் 4 பேர் பலியாகினர்.
அமெரிக்காவின் அரிசோனா மலைப்பகுதியில் வெள்ளிக்கிழமை தனியார் ஹெலிகாப்டர் வெள்ளிக்கிழமை விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 3 பெண்கள் உள்பட 4 பேர் பலியாகினர். பீனிக்ஸ் நகருக்கு கிழக்கே சுமார் 103 கிலோமீட்டர் தொலைவில் உள்ள டெலிகிராஃப் பள்ளத்தாக்கு அருகே காலை 11 மணியளவில் இந்த விபத்து நடந்ததாக ஷெரிப் அலுவலகம் தெரிவித்துள்ளது.
ஹெலிகாப்டர் மலைகளின் குறுக்கே கட்டப்பட்டிருந்த பொழுதுபோக்கு ஸ்லாக் லைனில்(கயிறு அல்லது பட்டை) மோதியதால் இந்த விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்று அந்த அலுவலகம் மேலும் குறிப்பிட்டுள்ளது. விபத்துக்குள்ளான பகுதியை அடைய மீட்புக்குழுவினருக்கு நீண்ட நேரமானது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விபத்து குறித்து மத்திய விமானப் போக்குவரத்து நிர்வாகமும் தேசிய போக்குவரத்து பாதுகாப்பு வாரியமும் விசாரணை நடத்தி வருகின்றன. விபத்துக்குள்ளான ஹெலிகாப்டர் பள்ளத்தாக்கிலிருந்து மேற்கே 47 கிலோமீட்டர் தொலைவில் உள்ள குயின் க்ரீக் நகரில் உள்ள விமான நிலையத்திலிருந்து புறப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.