இலங்கை அரசுக்கு 10 கடற்படை ஹெலிகாப்டர்களை அமெரிக்கா வழங்குவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்கக் கடற்படையின் டிஹெச்-57 ரகத்தைச் சேர்ந்த 10 ஹெலிகாப்டர்களை இலங்கையின் மீட்புப் படைகளின் பயன்பாட்டிற்காக விரைவில் வழங்கப்படும் என அமெரிக்க தூதர் ஜூலி சங் அறிவித்துள்ளார்.
இதுபற்றி, அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப் பதிவில் கூறப்பட்டதாவது:
“நம்பகத்தன்மைக்காக வடிவமைக்கப்பட்ட இந்த ஹெலிகாப்டர்கள் அதிகப்படியான பாதுகாப்புப் பொருள்கள் திட்டத்தின் கீழ் வழங்கப்படுகின்றன.
உபகரணங்களுக்கான எந்தவிதச் செலவும் இன்றி இந்த ஹெலிகாப்டர்கள் வழங்க முடிகிறது என்பதில் நான் மிகவும் மகிழ்ச்சி அடைகின்றேன்” எனக் கூறியுள்ளார்.
இத்துடன், திட்வா புயல் போன்ற பேரிடர் காலங்களில் ஹெலிகாப்டர்கள் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்துள்ளதாகக் கூறிய அவர் அமெரிக்காவில் இருந்து நிகழாண்டின் (2026) துவக்கத்தில் அந்த 10 ஹெலிகாப்டர்களும் இலங்கை வந்து சேரும் எனத் தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.