

யேமன் நாட்டின் தீவில், கடந்த சில வாரங்களாகச் சிக்கியிருந்த இந்தியப் பெண் ஒருவர் மீட்கப்பட்டு சௌதி அரேபியாவுக்கு அழைத்துச் செல்லப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
யேமனின் சோகோத்ரா தீவில் சிக்கித் தவித்த இந்தியப் பெண் ஒருவர் புதன்கிழமை (ஜன. 7) காலை சிறப்பு விமானம் மூலம் மீட்கப்பட்டு சௌதி அரேபியாவுக்கு அழைத்துச் செல்லப்பட்டதாக, தூதரக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதுபற்றி, யேமனின் இந்தியத் தூதரகம் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப் பதிவில் கூறப்பட்டதாவது:
“கடந்த சில வாரங்களாக யேமனின் சோகோத்ரா தீவில் சிக்கிய ராக்கி கிஷன் கோபால் என்ற இந்தியப் பெண், சிறப்பு யேமனியா விமானம் மூலம் வெற்றிகரமாக மீட்கப்பட்டு ஜெட்டா நகரத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டார்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து, சௌதி அரேபியாவில் உள்ள இந்தியத் தூதரக அதிகாரிகளிடம் ராக்கி கிஷன் பத்திரமாக ஒப்படைக்கப்பட்ட நிலையில், அவர் இன்று காலை இந்தியாவுக்குத் திரும்பியதாகக் கூறப்பட்டுள்ளது.
இருப்பினும், அவர் யேமன் நாட்டுக்குச் சென்ற காரணம் மற்றும் தீவில் சிக்கிய விவரங்கள் குறித்து எந்தவொரு தகவலும் இதுவரை வெளியிடப்படவில்லை.
முன்னதாக, யேமனின் ஹவுதி உள்ளிட்ட உள்நாட்டு ஆயுதக்குழுக்களுக்கு இடையில் கடந்த சில நாள்களாகக் கடுமையான மோதல்கள் நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.