

வெனிசுவேலா மீது நடத்தத் திட்டமிடப்பட்டிருந்த இரண்டாவது தாக்குதலை ரத்து செய்ததாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார்.
வெனிசுவேலா மீது தாக்குதல் நடத்தி, அந்நாட்டு அதிபர் நிகோலஸ் மதுரோவையும் அமெரிக்க படையினர் கைது செய்தனர். இந்த நிலையில், வெனிசுவேலா மீது மீண்டுமொரு தாக்குதல் நடத்தத் திட்டமிருந்ததாகவும், அதனைத் தற்போது ரத்து செய்வதாகவும் அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார்.
இதுகுறித்த அறிவிக்கையில் டிரம்ப், "வெனிசுவேலா சமாதானத்தைத் தேடும் விதமாக, ஏராளமான அரசியல் கைதிகளை விடுவித்து வருகிறது. இது மிகவும் முக்கியமான மற்றும் புத்திசாலித்தனமான நடவடிக்கை.
அமெரிக்காவும் வெனிசுவேலாவும் ஒன்றாக இணைந்து சிறப்பாகச் செயல்பட்டு வருகின்றன. குறிப்பாக, இது எண்ணெய் மற்றும் எரிவாயு உள்கட்டமைப்பை மீண்டும் கட்டியெழுப்புவது தொடர்பானது.
வெனிசுவேலாவின் இந்த ஒத்துழைப்பின் காரணமாக, அவர்கள் மீது திட்டமிட்டிருந்த இரண்டாவது அலை தாக்குதல்களை ரத்து செய்துள்ளேன். இனி அது தேவையில்லை என்று தோன்றுகிறது.
இருப்பினும், பாதுகாப்பு காரணங்களுக்காக அனைத்து கப்பல்களும் இருக்கும். குறைந்தபட்சம் 100 பில்லியன் டாலர், பெரிய எண்ணெய் நிறுவனத்தால் முதலீடு செய்யப்படும்" என்று தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.