

காஸா மீதான தாக்குதலில் பாகிஸ்தானின் பங்கேற்பை இஸ்ரேல் மறுத்துள்ளது.
காஸாவை கைப்பற்றுவதில் இஸ்ரேலும் அமெரிக்காவும் தொடர்ந்து முயற்சித்து வருகின்றன. இதற்காக சர்வதேச நிலைப்படுத்தல் படையையும் அமெரிக்கா உருவாக்கி வருகிறது. இந்தப் படையில் சேருவதற்காக பாகிஸ்தான் உள்பட பல நாடுகளை அமெரிக்கா கோரியுள்ளது.
ஆனால், காஸாவுக்கான எதிரான போரில் பாகிஸ்தான் பங்கேற்பதற்கு இஸ்ரேல் மறுப்பு தெரிவித்துள்ளது.
இதுகுறித்து, இஸ்ரேல் தூதர் ரூவென் அஸார் பேசுகையில், "நாம் முன்னேறக்கூடிய முயற்சியில் ஈடுபட்டுள்ளோம். அதற்கு ஹமாஸ் அகற்றப்படுவதைத் தவிர வேறு வழியில்லை.
ஹமாஸுடன் சண்டையிட விரும்பவில்லை என்பதால், ஏற்கெனவே பல நாடுகளும் அவர்களின் படைகளை அனுப்பவில்லை. இதனால், தற்போதைய சூழ்நிலையில் நிலைப்படுத்தல் படை என்ற யோசனை அர்த்தமற்றதாகி விட்டது" என்று தெரிவித்தார்.
மேலும், இந்தப் படையில் பாகிஸ்தானின் பங்கை இஸ்ரேல் ஏற்றுக் கொள்கிறதா? என்ற கேள்விக்கு - ’இல்லை’ என்றே அஸார் பதிலளித்தார்.
நம்ப இயலாதவர்களுடனும், முறையான இராஜதந்திர உறவுகளைக் கொண்டவர்களுடனும் மட்டுமே ஒத்துழைக்கின்றன" என்று அஸார் கூறினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.