

காஸாவில் இஸ்ரேல் சனிக்கிழமை(ஜன. 31) மேற்கொண்ட தீவிர தாக்குதல்களில் பாலஸ்தீன மக்கள் 12 பேர் கொல்லப்பட்டனர்.
காஸாவில் உள்ள பாலஸ்தீனர்கள் எல்லையைக் கடந்து செல்ல ஏதுவாக, காஸா-எகிப்து இடையிலான ராஃபா எல்லைப்பாதை நாளை (பிப். 1) திறக்கப்படுவதாக இஸ்ரேல் தரப்பால் தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், காஸாவில் இன்று அதிகாலையில் தாக்குதல்கள் தொடர்ந்தன. இந்தத் தாகுதல்களில் 12 பேர் கொல்லப்பட்டனர், மேலும், காயமடைந்தவர்கள் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவதாக அங்குள்ள மருத்துவமனை அதிகாரிகள் தெரிவித்தனர்.
கடந்த 2024, மே மாதத்தில் இஸ்ரேல் படைகள் இந்த எல்லையைக் கைப்பற்றிய பிறகு, சுமாா் ஒன்றரை ஆண்டுகள் கழித்து தற்போதுதான் ராஃபா வழித்தடம் மக்கள் போக்குவரத்துக்காகத் திறக்கப்படுகிறது. நாளொன்றுக்கு சுமாா் 150 பேரை மட்டுமே அனுமதிக்க இஸ்ரேல் திட்டமிட்டுள்ளதாக்வும் தெரிவிகப்பட்டுள்ளது. இதனிடையே, அப்பகுதிகளில் இஸ்ரேலின் தாக்குதல்கள் தொடருவதால் காஸாவில் பதற்ற நிலை நீடிக்கிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.