மின் தடை, ஒரு யூனிட் ரூ.35, தனியாரிடம் மின் கொள்முதல்! அமைச்சர் நிர்மல் குமாரிடம் சரமாரிக் கேள்விதிமுக ஆட்சியில் ரூ. 20-க்கு வாங்கப்பட்ட மின்சாரம், ரூ. 35-க்கு கொள்முதல்! செந்தில் பாலாஜிபள்ளிகளில் வாரத்தில் 5 நாள்களும் உடற்கல்வி வகுப்புகள்! ராஜ்மோகன் அறிவிப்புசி.வி. சண்முகம் வெற்றியை எதிர்த்த வழக்கு தள்ளுபடி!6 எம்.எல்.ஏக்கள் ராஜிநாமா: பேரவைத் தலைவர் நடவடிக்கை செல்லும்: சென்னை உயர்நீதிமன்றம்!உயிரைவிடத் தமிழினத்தின் அடையாளமே பெரிது என நிரூபித்தவர் சங்கரலிங்கனார்: முதல்வர் விஜய்உயிரைவிடத் தமிழினத்தின் அடையாளமே பெரிது என நிரூபித்தவர் சங்கரலிங்கனார்: முதல்வர் விஜய்தங்கம் விலை சவரனுக்கு ரூ. 280 குறைவுஜந்தர் மந்தரில் போராட முயன்ற சிஜேபினர் கைது!

அமெரிக்கா - ஈரான் இடையேயான பேச்சுவார்த்தை பாகிஸ்தானில் நடைபெறுகிறதா?

அமெரிக்கா - ஈரான் இடையேயான அடுத்தக்கட்ட பேச்சுவார்த்தை பாகிஸ்தானில் நடைபெறவுள்ளதாகக் தகவல்கள் வெளியாகியுள்ளன.

America - Iran Talks

அமெரிக்கா, ஈரான் இடையே நடைபெற்ற பேச்சுவார்த்தையில் ​​பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் (நடுவில்), அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வான்ஸ் (இடதுபுறம்) மற்றும் கத்தாரின் பிரதமரும் வெளியுறவுத்துறை அமைச்சருமான ஷேக் முகமது பின் அப்துல்ரஹ்மான் பின் ஜாசிம் அல்-தானி (வலது) - கோப்புப் படம்

Published On :

அமெரிக்கா - ஈரான் இடையேயான அடுத்தக்கட்ட பேச்சுவார்த்தை பாகிஸ்தானில் நடைபெறவுள்ளதாகக் தகவல்கள் வெளியாகியுள்ளன.

அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையிலான அடுத்தகட்ட பேச்சுவார்த்தைகளை பாகிஸ்தான் தலைநகரான இஸ்லாமாபாத்தில் நடத்தவுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேற்கு ஆசியாவில் போரை முடிவுக்குக் கொண்டுவந்து அமைதியை மீட்டெடுக்கும் நோக்கில் அமெரிக்காவும் ஈரானும் ஜூன் 18 அன்று புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன. பின்னர், ஜூன் 21 அன்று பாகிஸ்தான், கத்தார் மத்தியஸ்தம் செய்த நிலையில் சுவிட்சர்லாந்தில் பேச்சுவார்த்தைகள் நடைபெற்றன.

இதனைத் தொடர்ந்து, அடுத்தக்கட்ட பேச்சுவார்த்தைகளை நடத்த சுவிட்சர்லாந்து அல்லது இஸ்லாமாபாத் தேர்வு செய்யப்படவுள்ளதாகக் கூறப்பட்ட நிலையில், இஸ்லாமாபாத்தில் பேச்சுவார்த்தை நடத்தவே சாத்தியங்கள் அதிகமிருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

ஜூலை 11 அன்று இருதரப்பும் பேச்சுவார்த்தையில் ஈடுபடுவார்கள் என எதிர்பார்க்கப்படும் நிலையில் இடம் குறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் இன்னும் வெளியாகவில்லை.

ஈரானின் மறைந்த உச்ச தலைவர் கமெனியின் இறுதிச்சடங்கு நிகழ்வுகள் காரணமாக தற்போது பேச்சுவார்த்தை நிறுத்திவைக்கப்ப்பட்டுள்ளது. அவை முடிந்த பின்னர், ஈரானின் தூதுக்குழுவினர் பேச்சுவார்த்தை தொடர்பான விவரங்களைத் தெரிவிப்பார்கள்.

ஈரானின் அணுசக்தித் திட்டம், பொருளாதாரத் தடைகள் நீக்கம் மற்றும் வெளிநாடுகளில் முடக்கப்பட்டுள்ள ஈரானிய சொத்துக்கள் ஆகியவை பற்றி அடுத்தக்கட்ட பேச்சுவார்த்தைகளில் கவனம் செலுத்தப்படும் எனக் கூறப்படுகிறது. அதுமட்டுமின்றி, ஹோர்முஸ் நீரிணை தொடர்பாகவும், லெபனானில் போர் நிறுத்தத்தை நிலைநிறுத்துவது பற்றியும் விவாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Summary

Are talks between the US and Iran taking place in Pakistan?

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.