பாமக தலைவராக மீண்டும் அன்புமணி தேர்வு! நீட் வினாத்தாள் கசிவு! விரைவு நீதிமன்றத்தில் அவகாசம் கோரிய சிபிஐ! சென்னை – செய்யாறு இடையே 4 வழிச்சாலை: திமுக ஆட்சியில் போடப்பட்ட டெண்டர் ரத்து!தமிழகத்துக்கு இன்றுமுதல் தினமும் 3,500 கன அடி காவிரி நீா்: கா்நாடகத்துக்கு உத்தரவுதமிழகத்தில் 3 நாள்கள் வெப்பநிலை அதிகரிக்க வாய்ப்பு
/

ரூ. 52,000 கோடி இழப்பீடு! ஜான்சன் & ஜான்சன் நிறுவனம் அறிவிப்பு! எதற்காக?

ஜான்சன் & ஜான்சன் நிறுவனம் ரூ. 52,000 கோடி இழப்பீடு வழங்க முன்வந்திருப்பது பற்றி...

News image

ஜான்சன் & ஜான்சன் - Photo | Reuters

Updated On :29 ஜூலை 2026, 11:25 am IST

ஜான்சன் அண்டு ஜான்சன் நிறுவனத்தின் பேபி பவுடரைப் பயன்படுத்தியதால் கருப்பை புற்றுநோய் ஏற்படுவதாக தொடரப்பட்ட பல்லாயிரக்கணக்கான வழக்குகளுக்கு தீர்வு காண ரூ. 52,000 கோடி இழப்பீடு வழங்கவுள்ளதாக தெரிவித்துள்ளது.

ஜான்சன் அண்டு ஜான்சன் நிறுவனத்தின் டால்கம் பேபி பவுடரை பயன்படுத்தியவர்களுக்கு கருப்பை புற்றுநோய் ஏற்படுவதாகவும், அதில், புற்றுநோயை ஏற்படுத்தக்கூடிய வேதிப்பொருள் இருப்பதாகவும் புகார்கள் எழுந்தன.

இந்த புகாரைத் ஜான்சன் அண்டு ஜான்சன் நிறுவனம் மறுத்தாலும், 2020 முதல் டால்கம் பேபி பவுடர் உள்ளிட்ட சில பொருள்களின் விற்பனையை நிறுத்தியது.

ஜான்சன் அண்டு ஜான்சன் நிறுவனத்துக்கு எதிராக அமெரிக்கா முழுவதிலும் தொடரப்பட்ட கிட்டத்தட்ட 76,000 வழக்குகளும் நியூ ஜெர்சி நீதிமன்றத்தில் ஒருங்கிணைக்கப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வந்தது.

இந்த நிலையில், நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டவர்களுக்கு மொத்தம் 5.5 பில்லியன் டாலர் (ரூ. 52,600 கோடி) இழப்பீடு வழங்க ஒப்புக் கொள்வதாக ஜான்சன் அண்டு ஜான்சன் நிறுவனம் திங்கள்கிழமை தெரிவித்தது.

ஜான்சன் அண்டு ஜான்சன் நிறுவனத்தின் துணைத் தலைவர் எரிக் ஹாஸ், இந்த வழக்குகள் அடிப்படையற்றவை என்றும், ஆனால் ஒரு முடிவைக் காணும் நோக்கில் நிறுவனம் சமரசத்துக்கு முன்வந்ததாகவும் தெரிவித்துள்ளார்.

வருகின்ற 2027 ஆம் ஆண்டுக்குள் 3 பில்லியன் டாலரை செலுத்தவும், மீதமுள்ள தொகையை 2028-க்குள் செலுத்தவும் ஜான்சன் அண்டு ஜான்சன் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

இருப்பினும், நீதிமன்றங்களில் வழக்குத் தொடர்ந்துள்ள கருப்பை புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களில் 95 சதவிகிதம் பேர் இதனை ஏற்றுக் கொண்டால் மட்டுமே ஜான்சன் அண்டு ஜான்சன் நிறுவனத்தின் ஒப்பந்தம் நீதிமன்றத்தால் ஏற்றுக்கொள்ளப்படும்.

Summary

Rs. 52,000 crore compensation! Johnson & Johnson announces—what is it for?

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.