ஈரான் அமெரிக்கா இடையேயான பேச்சுவார்த்தை கத்தாரில் உள்ள தோஹாவில் நாளை (ஜூன் 30) நடைபெற உள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
ஈரான் - அமெரிக்கா இடையே கடந்த பிப். 28 ஆம் தேதி தொடங்கிய போர், பேச்சுவார்த்தைகளில் முடிவு எட்டப்பட்டதையடுத்து இடைக்கால ஒப்பந்தத்தில் இரு நாடுகளும் கையெழுத்திட்டன. இந்த ஒப்பந்தம் ஸ்விட்சர்லாந்தில் கையெழுத்தானது.
இதையடுத்து, ஹோர்முஸ் நீரிணையை முழுவதுமாக திறக்க முடிவு செய்யப்பட்டது. இந்த நிலையில், சிங்கப்பூர் நாட்டு சரக்குக் கப்பல், ஹோர்முஸ் நீரினையைக் கடக்கும் போது, ஈரான் அந்தக் கப்பலை தாக்கியது.
அந்தக் கப்பலானது, ஈரான் கடலோரப் பகுதியில் செல்லாமல் மற்றொரு பதையில் சென்றதால் அதனை தாக்கியதாக ஈரான் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து ஈரான் மீது அமெரிக்க ராணுவம் தாக்குதல் நடத்தியதால் இரு நாடுகளுக்கும் இடையே மீண்டும் தாக்குதல்கள் தொடர்கின்றன.
இந்த நிலையில், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தனது சமூக ஊடகப் பக்கத்தில், “ஈரான் தரப்பில் ஒரு சந்திப்பைக் கோரியுள்ளனர். இந்த சந்திப்பானது கத்தாரில் உள்ள தோஹாவில் நாளை நடைபெறும்” என்று பதிவிட்டுள்ளார்.
Summary
US President Donald Trump has announced that a meeting between Iran and the US is scheduled to take place tomorrow (June 30) in Doha, Qatar.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





