மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

ஈரான் அணு ஆயுதங்கள் தயாரிக்கவில்லை! - ரஷியா திட்டவட்டம்

ஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!

News image
ஈரான் கமேனி ஆதரவாளர்கள்- AP Photo
Updated On :3 மார்ச் 2026, 12:33 pm

தினமணி செய்திச் சேவை, இணையதளச் செய்திப் பிரிவு

ஈரான் அணு ஆயுதங்கள் தயாரிக்கவில்லை என்று ரஷியா திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.

அணு ஆயுதம் தயாரிக்கத் தேவையான யுரேனியத்தை செறிவூட்டி வருவதாகக் குற்றஞ்சாட்டி, ஈரானில் நூற்றுக்கும் மேற்பட்ட இடங்களைக் குறிவைத்து, அமெரிக்க-இஸ்ரேல் கூட்டுப் படைகள் சனிக்கிழமை பெரிய அளவிலான வான்வழித் தாக்குதலை நடத்தியதைச் சுட்டிகாட்டியுள்ள ரஷியா, ‘அணு ஆயுதங்கள் பயன்பாட்டுக்கு வரக்கூடாது என்னும் எந்த உன்னத நோக்கத்துக்காக ஈரானில் அமெரிக்கா போர் தொடுத்துள்ளதோ, இப்போது அதற்கு நேரெதிராக விளைவுகள் ஏற்படக்கூடும்.

ஈரான் அணு ஆயுதங்கள் தயாரிப்பில் ஈடுபட்டதற்கான எந்தவொரு ஆதாரமும் இதுவரை ரஷியா கண்டிரவில்லை. அப்பிராந்தியத்தில் அணு ஆயுதங்கள் வைத்திருக்கும் ஒரே நாடாக இஸ்ரேல் திகழ்கிறது. ஆயினும், இதனை நிராகரித்தோ ஆமோதித்தோ அவர்கள் கருத்து தெரிவிக்கவில்லை’ என்று ரஷியா தரப்பிலிருந்து செவ்வாய்க்கிழமை (மார்ச் 3) தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.