அக்ஷய திருதியை: விலை உயர்விலும் தங்கம் வாங்க ஆர்வம் காட்டிய மக்கள்கப்பல்கள் மீதான தாக்குதல் போர் நிறுத்த விதிமீறல்: ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கைஅமெரிக்க கடற்படை முற்றுகை நீடிக்கும் வரை ஹோர்முஸ் நீரிணை திறக்கப்படாது: ஈரான் விஜய் வரவால் விசிகவுக்கு பாதிப்பு இல்லை: தொல். திருமாவளவன்நாளை பிரசாரம் நிறைவு: சென்னையில் இறுதிக் கட்ட பிரசாரத்துக்கு கட்சிகளுக்கு இடங்கள் ஒதுக்கீடுஇந்தியா-அமெரிக்கா வா்த்தக ஒப்பந்தம்: இன்றுமுதல் 3 நாள்கள் பேச்சுஇன்று நிறைவடைகிறது தபால் வாக்குப் பெறும் பணி!
/

பாகிஸ்தானுடன் கடும் சண்டை: ஆப்கானிஸ்தானில் 5 நாள்களில் 42 பேர் பலி!

ஆப்கானிஸ்தானில் கொல்லப்பட்டவர்கள் எண்ணிக்கை 42-ஐ கடந்தது

News image

ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி! - AP Photo

Updated On :3 மார்ச் 2026, 11:26 am

பாகிஸ்தானுடனான கடும் சண்டையில் ஆப்கானிஸ்தானில் கொல்லப்பட்டவர்கள் எண்ணிக்கை 42-ஐ கடந்திருப்பதாக ஐ.நா. தெரிவித்துள்ளது.

பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் இடையே பல மாதங்களாக எல்லை தாண்டிய தாக்குதல்கள் நீடித்து வந்த நிலையில், ஆப்கானிஸ்தான் மீது நேரடியாகப் போா் தொடுப்பதாக பாகிஸ்தான் அண்மையில் அறிவித்தது. ‘ஆபரேஷன் காஸாப் லில் ஹக்’ எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த ராணுவ நடவடிக்கையில் ஆப்கானிஸ்தானில் இதுவரை சுமாா் 352 தலிபான்கள் கொல்லப்பட்டதாக பாகிஸ்தான் தெரிவித்துள்ளது.

இதனிடையே, கடந்த வியாழக்கிழமை (பிப். 26) இரவு பாகிஸ்தான் தொடங்கிய இந்தப் போா் நடவடிக்கைகளால் ஆப்கானிஸ்தானில் பிப். 26 - மார்ச் 2 வரையிலான ஐந்தே நாள்களில், குடிமக்கள் 42 பேர் கொல்லப்பட்டனர் என்ற தகவலை ஆப்கானிஸ்தானுக்கான ஐக்கிய நாடுகள் உதவித் திட்ட முகமை இன்று (மார்ச் 3) வெளியிட்டுள்ளது. இந்நிலையில், இருநாட்டு அரசுகளும் சண்டையைத் தவிர்த்து தூதரக ரீதியாக பேச்சுவார்த்தை வழியாக தீர்வு காண கோரிக்கை வலுத்துள்ளது.

Summary

Pakistani and Afghan troops clash, UN says 42 Afghan civilians killed

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.