தீபாவளிக்கு ஊருக்குப் போறீங்களா? ரயில் டிக்கெட் முன்பதிவு தொடங்குவது எப்போது?பிரபல பெருங்காய நிறுவனங்களுக்கு என்ன ஆனது? தடை விதிப்பின் பின்னணி!விவசாயிகள் மீதான வழக்குகளை ரத்து செய்வது முதல்முறையல்ல! பட்டியலிட்ட உதயநிதி!திமுக ஆட்சியில் விவசாயிகள், ஆசிரியர்கள் மீது பதியப்பட்ட வழக்குகள் ரத்து! முதல்வர் விஜய்டிஜிட்டல் முறையில் ஓட்டுநர் உரிமம், வாகனப் பதிவுச் சான்றிதழ்! முதல்வர் விஜய் அறிவிப்புமீஞ்சூரில் கடல் நீர் சுத்தகரிப்பு ஆலை! முதல்வரின் அதிரடி அறிவிப்புகள்!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,800 சரிந்தது! இன்றைய நிலவரம்!ஈரானிய எண்ணெய்க் கப்பல்கள் உள்பட 100 இடங்கள் மீது அமெரிக்க ராணுவம் தாக்குதல்!சா்க்கரை இருப்பு வைக்க மத்திய அரசு மேலும் கட்டுப்பாடு சுபாஷ் சந்திரா சொத்துகளை விற்கத் தடை- ரூ.6.5 கோடி கடன் தீா்வுத் திட்டமும் நிறுத்திவைப்புஎழுத்தாளா் கே.ஆா்.நரசய்யாவுக்கு சிவசங்கரி விருது: சிறந்த நூலாக ‘அப்பன் திருவடி’ தோ்வுமகப்பேறு விடுப்பை 365 நாள்களாக உயா்த்தி அரசாணை வெளியீடு செப்.4-இல் விண்ணில் பாய்கிறது இ.ஓ.எஸ்.-5 செயற்கைக்கோள் அமெரிக்கா உடன்பட்டால் போா் நிறுத்தத்துக்கு திரும்ப தயாா்: ஈரான்ராஜீவ் காந்தி சாலையில் இன்றுமுதல் போக்குவரத்து மாற்றம்

ஆப்கனில் கடும் வெள்ளம்: 17 பேர் பலி!

ஆப்கானிஸ்தானில் ஏற்பட்டுள்ள கடுமையான வெள்ளம் காரணமாக 17 பேர் பலியானது பற்றி...

ஆப்கன் வெள்ள பாதிப்பு - கோப்புப் படம்

Published On :17 ஆகஸ்ட் 2026, 3:20 pm IST

ஆப்கானிஸ்தானில் ஏற்பட்டுள்ள கடுமையான வெள்ளம் காரணமாக 17 பேர் பலியாகினர்.

ஆப்கானிஸ்தானில் மோசமான வானிலை காரணமாக கடந்த 24 மணி நேரத்தில் இடியுடன் கூடிய மழையால் ஏற்பட்ட கடுமையான வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி 17 பேர் பலியானதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன. இதில், 26 பேர் காயமடைந்துள்ளனர்.

தேசிய பேரிடர் மீட்புக் குழுவினர் மீட்புப் பணிகளில் ஈடுபட்டு வரும் நிலையில் பலி எண்ணிக்கை மேலும் உயரலாம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த வெள்ளத்தின் காரணமாக ஆப்கனில் உள்ள 34 மாகாணங்களில் மேற்கு, மத்திய மற்றும் வடமேற்கு பகுதிகளில் உள்ள 12 மாகாணங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.

அதுமட்டுமின்றி, 147 வீடுகள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு 80 கி.மீ தொலைவிலான சாலைகள் வெள்ளத்தில் மூழ்கியதாகவும் பல ஏக்கர் விவசாய நிலங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தேசிய பேரிடர் மீட்புக் குழுவின் செய்தித் தொடர்பாளர் யூசுப் ஹம்மாத் தெரிவித்தார்.

இந்தாண்டின் தொடக்கத்தில் கடுமையான பனிப்பொழிவு மற்றும் வெள்ளத்தின் காரணமாக பலர் பலியான நிலையில் மீண்டும் ஆப்கனில் வெள்ளம் ஏற்பட்டுள்ளது.

ஆப்கானிஸ்தான் கடுமையான வானிலையால் அதிகம் பாதிக்கப்படக்கூடிய நாடு. அங்கு ஏற்படும் கனமழை, வெள்ளம் காரணமாக பல நூறு மக்கள் வரை பலியாகும் சம்பவங்கள் ஏற்பட்டுள்ளன.

கடந்த 2024-ம் ஆண்டில் கூட கடும் வெள்ளப்பெருக்கின் காரணமாக 300-க்கும் மேற்பட்ட மக்கள் பலியானது குறிப்பிடத்தக்கது.

பல ஆண்டுகளாக நடைபெறும் மோதலகள், மோசமான உள்கட்டமைப்பு, சீரற்ற பொருளாதாரம், காடுகள் அழிக்கப்பட்டது மற்றும் மோசமான காலநிலை மாற்றம் ஆகியவற்றால் ஆப்கானிஸ்தானில் பேரிடர்களின் தாக்கம் அதிகரித்துள்ளது.

குறிப்பாக, அங்கு பல வீடுகள் மண்ணால் கட்டப்பட்டுள்ளதால் திடீர் பெருவெள்ளம் அல்லது கடும் பனிப்பொழிவு போன்ற பேரிடர்களில் இருந்து மிகக் குறைந்த பாதுகாப்பையே அவை வழங்குகின்றன.

Summary

Extreme weather in Afghanistan leaves 17 people dead

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.