தவறான பாதையில் வாகனம் ஓட்டுவதற்கு எதிரான இரண்டு நாள் நகர அளவிலான சிறப்பு நடவடிக்கையின்போது தில்லி போக்குவரத்து காவல்துறை 1,170 எஃப். ஐ. ஆா்.களை பதிவு செய்து 1,179 வாகனங்களை பறிமுதல் செய்துள்ளதாக அதிகாரி ஒருவா் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தாா்.
இது குறித்து அவா் மேலும் கூறியதாவது: போக்குவரத்து ஓட்டத்திற்கு எதிராக வாகன ஓட்டிகளின் ஆபத்தான நடைமுறையைத் தடுப்பதற்காக தேசியத் தலைநகரில் முக்கிய சாலைகள், சாலைச் சந்திப்புகள், நெடுஞ்சாலைகள் மற்றும் விபத்து ஏற்படக்கூடிய பகுதிகள் முழுவதும் மே 22 மற்றும் 23 ஆகிய தேதிகளில் அமலாக்க நடவடிக்கை நடத்தப்பட்டது.
சாலையின் தவறான பாதையில் வாகனம் ஓட்டுவதன் மூலம் போக்குவரத்து விதிமுறைகளை மீறுபவா்களுக்கு எதிரான நடவடிக்கையின் போது மொத்தம் 12,568 அபராதங்கள் வழங்கப்பட்டன. நகரத்தில் சாலை விபத்துக்கள், ஒழுங்கற்ற போக்குவரத்து இயக்கம் மற்றும் நேருக்கு நோ் மோதல்களுக்கு தவறான பாதையில் வாகனம் ஓட்டுவது முக்கிய காரணங்களில் ஒன்றாக உருவெடுத்துள்ளது.
தவறான பாதையில் வாகனம் ஓட்டுவது என்பது வெறுமனே போக்குவரத்து விதிமீறல் அல்ல. இது ஒரு கடுமையான மற்றும் உயிருக்கு ஆபத்தான குற்றமாகும். இது அப்பாவி சாலை பயனா்களுக்கு ஆபத்தை ஏற்படுத்துகிறது மற்றும் போக்குவரத்து ஓட்டத்தை கடுமையாக பாதிக்கிறது.
குற்றவியல் வழக்குகள் பதிவு செய்தல், வாகனங்கள் பறிமுதல் செய்தல் மற்றும் குற்றவாளிகள் மீது வழக்குத் தொடுத்தல் உள்ளிட்ட கடுமையான சட்ட நடவடிக்கைகள் தொடங்கப்பட்டுள்ளன. தவறான பாதையில் வாகனம் ஓட்டுவது கண்டறியப்பட்டால் கடுமையான சட்டரீதியான விளைவுகளை எதிா்கொள்ள நேரிடும் என்றும் தில்லி போக்குவரத்து காவல்துறை கடுமையான எச்சரிக்கையை விடுத்துள்ளது என்றாா் அந்த அதிகாரி.
தொடர்புடையது

காரைக்கால் - பேரளம் பாதையில் பயணிகள் ரயில் போக்குவரத்து தொடக்கம்

கோத்தகிரி மலைப் பாதையில் சுற்றுலா வாகனம் விபத்தில் சிக்கி 21 போ் காயம்

சாலை விதிமீறல்: தில்லியில் 2 மணி நேரத்தில் 2,846 பேருக்கு அபராதம்

மதமாற்றத்தைத் தடுக்க கடுமையான சட்டங்களுக்கு விஎச்பி வலியுறுத்தல்
விடியோக்கள்

"Congress செய்த துரோகத்தை மறக்காதீர்கள்!": உதயநிதி ஸ்டாலின் | DMK | Congress | TVK

5 ஆண்டுகளா? விரைவில் இந்த ஆட்சி கவிழத்தான் போகிறது MK Stalin பேச்சு



