பிலிகுண்டுலுவுக்கு 14 ஆயிரம் கன அடியாக நீர்வரத்து அதிகரிப்புஅக்டோபர் 11-ல் முதல்வர் விஜய்யின் வாழ்க்கை வரலாற்றுப் புத்தகத்தை வெளியிடுகிறேன் - மதுரை ஆதீனம் நவோதயா பள்ளிகளுக்கு இடங்கள் தேர்வு செய்ய தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு!2027-ஆம் ஆண்டுக்கான சிபிஎஸ்இ 10, 12ஆம் வகுப்புத் தேர்வு அட்டவணை! மாணவர் பாரதிதாசன் கண்ணீர் விடியோ! சமூக நீதி நாளில் இப்படி ஒரு அநீதி - உதயநிதி

ஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை

ஈரானின் புதிய தலைவருக்கு இஸ்ரேல் எச்சரிக்கை விடுத்திருப்பது பற்றி...

மோஜ்தபா கமேனி (கோப்புப்படம்) - AP

Published On :

ஈரானின் புதிய உச்ச தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள கமேனியின் மகன் மோஜ்தபா கமேனியும் கொல்லப்படுவார் என்று இஸ்ரேல் பாதுகாப்புத் துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

ஈரானின் அணு ஆயுத கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் ஆகிய இரு நாடுகளும் இணைந்து கடந்த சனிக்கிழமை ஈரான் மீது கூட்டுத் தாக்குதல் நடத்தின.

இந்த தாக்குதல்களில் ஈரானின் மதகுரு அலி அயத்துல்லா கமேனி, பாதுகாப்புத் துறை அமைச்சர் உள்பட முக்கியத்துவம் வாய்ந்த 40-க்கும் மேற்பட்ட தலைவர்கள் கொல்லப்பட்டனர். கமேனி மட்டுமின்றி, அவரது மனைவி, மகள், மருமகன், பேத்தி உள்ளிட்டோரும் இந்தத் தாக்குதலில் கொல்லப்பட்டனர்.

இந்த நிலையில், கமேனியின் இரண்டாவது மகன் மோஜ்தபா கமேனியை புதிய தலைவராக நிபுணர்கள் சபை தேர்வு செய்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இருப்பினும், இன்னும் நிபுணர்கள் சபையால் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை.

மறைந்த கமேனியின் உடல் பொதுமக்களின் அஞ்சலிக்காக தெஹ்ரானில் உள்ள இமாம் கோமெய்னி திடலில் இன்றிரவு முதல் மூன்று நாள்கள் வைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, ஈரானின் புதிய உச்ச தலைவராக யார் தேர்வு செய்யப்பட்டாலும் அவரையும் குறிவைப்போம் என்று இஸ்ரேல் பாதுகாப்புத் துறை அமைச்சர் இஸ்ரேல் காட்ஸ் தெரிவித்துள்ளார்.

மேலும், அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், "இஸ்ரேலை அழிக்கவும், அமெரிக்கா உள்ளிட்ட பிற நாடுகளை அச்சுறுத்தவும், ஈரானிய மக்களை ஒடுக்கவும் நினைக்கும் ஈரானிய பயங்கரவாத ஆட்சியால் நியமிக்கப்பட்ட எந்தவொரு தலைவரும், கொல்வதற்கான ஒரு தெளிவானஇலக்காக இருப்பார்.

அவரது பெயர் என்ன, அவர் எங்கு மறைந்திருக்கிறார் என்பது முக்கியமல்ல” எனக் குறிப்பிட்டுள்ளார்.

Summary

Iranian regime to replace Ali Khamenei will be a "target for elimination” - Israel's Defence Minister Israel Katz

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.