தவெக நட்சத்திரப் பேச்சாளர் பட்டியலிலிருந்து கூட்டணிக் கட்சித் தலைவர்களின் பெயர்கள் நீக்கம்! பௌர்ணமி கிரிவலம்: விழுப்புரம் - திருவண்ணாமலைக்கு செப். 26-இல் சிறப்பு ரயில்!முதல்வருக்குத் தெரியாமல் அரசாணையா?தவெக அரசுக்கு பெ. சண்முகம் சரமாரிக் கேள்விமதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்! தவெக வேட்பாளர்கள் விரட்டியடிக்கப்படுகிறார்களா?காலை உணவு திட்ட விரிவாக்கம்! திருவான்மியூரில் நாளை முதல்வர் விஜய் தொடக்கிவைக்கிறார்!பொது வாழ்வில் வந்துவிட்டால் சுய மரியாதையை இழக்க வேண்டுமா? ஸ்மிருதி இராணி கேள்விமகள் புத்தாக்க நிறுவனத்துக்கு நிதி கொடுக்காதது ஏன்? மெலின்டா கேட்ஸ் விளக்கம்தமிழ்நாட்டில் நேற்று ஒரேநாளில் 228 பேருக்கு டெங்கு ஆசிய விளையாட்டுப் போட்டிகள் 10 மீ. ஏர் ரைபிள் பிரிவில் இந்திய வீரர் ஹிமான்சு தில்லான் வெள்ளி வென்றார்ஆசிய விளையாட்டு: 10 மீ. ஏர் ரைபிள் பிரிவில் வெள்ளி வென்ற ஆடவர் அணி!கனடாவில் விமானப் பயிற்சியின்போது 2 இந்திய மாணவர்கள் பலி! முதலீடுகளை ஈர்ப்பதற்காக முதல்வர் விஜய் லண்டன் சென்றதை கிண்டல் செய்வது ஏற்கத்தக்கதல்ல: மரிய வில்சன்கேரளத்தில் கனமழை! - 6 பேர் பலி; இன்று மஞ்சள் எச்சரிக்கை!

படுகொலையை மாற்ற முயற்சி! - ஆப்கன் மருத்துவமனை மீதான பாக். தாக்குதலுக்கு இந்தியா கண்டனம்!

ஆப்கன் மருத்துவமனை மீதான பாகிஸ்தானின் தாக்குதலில் 400 பேர் கொல்லப்பட்டதற்கு இந்தியா கண்டனம் தெரிவித்துள்ளது...

India condemns Pakistan's attack on Afghan hospital

ஆப்கானிஸ்தான் மருத்துவமனை மீதான பாகிஸ்தானின் தாக்குதலில் 400 பேர் கொலை... - AP

Published On :

ஆப்கானிஸ்தானில் மருத்துவமனை மீதான பாகிஸ்தானின் வான்வழித் தாக்குதலுக்கு இந்திய அரசு கண்டனம் தெரிவித்துள்ளது.

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் உள்ள 2000 படுக்கைகள் கொண்ட உமர் போதைப்பொருள் மறுவாழ்வு மருத்துவமனை மீது திங்கள்கிழமை (மார்ச் 16) இரவு பாகிஸ்தான் நடத்திய வான்வழித் தாக்குதலில் சுமார் 400 பேர் கொல்லப்பட்டனர்.

மேலும், 250-க்கும் மேற்பட்ட மக்கள் படுகாயங்களுடன் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், படுகொலையை பாகிஸ்தான் ராணுவ நடவடிக்கையாகச் சித்தரிக்க முயற்சிப்பதாகக் கூறிய இந்திய அரசு, இந்தத் தாக்குதலுக்கு இன்று கண்டனம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து, மத்திய வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

“ராணுவ இலக்காக நியாயப்படுத்த முடியாத ஓர் இடத்தின் மீது பாகிஸ்தான் நடத்திய இந்தத் தாக்குதல் ஒரு கோழைத்தனமான மற்றும் மனசாட்சியற்ற வன்முறைச் செயல். இந்தப் படுகொலையை ஒரு ராணுவ நடவடிக்கை போல சித்தரிக்க பாகிஸ்தான் முயற்சிக்கிறது” எனக் கூறப்பட்டுள்ளது.

ஏற்கெனவே, கடந்த சில நாள்களாக ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் இடையில் எல்லையைக் கடந்த தாக்குதல்கள் நடைபெற்று வந்தன.

பாகிஸ்தானில் நடைபெறும் பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு ஆப்கானிஸ்தானின் தலிபான் அரசு முக்கியமான காரணம் எனக் குற்றம்சாட்டிய பாகிஸ்தான் ராணுவ நடவடிக்கையாக முதலில் தாக்குதல்களைத் தொடங்கியது குறிப்பிடத்தக்கது.

Summary

The India has condemned Pakistan's airstrike on a hospital in Afghanistan.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.