கீழடி உள்பட 8 இடங்களில் அகழாய்வுக்கு மத்திய அரசு அனுமதி! கீழடி உள்பட 8 இடங்களில் அகழாய்வுக்கு மத்திய அரசு அனுமதி! ஆப்கனில் மருத்துவமனை மீது பாகிஸ்தான் ஏவுகணைத் தாக்குதல்! 400 பேர் பலி!!தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

தன்பாலின ஈர்ப்பாளரா மோஜ்தபா கமேனி? அமெரிக்க உளவுத்துறை தகவலால் திகைத்த டிரம்ப்!

மோஜ்தபா கமேனி தன்பாலின ஈர்ப்பாளராகவும் இருக்கலாம் என்ற அமெரிக்க உளவுத்துறையின் தகவல்கள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளதைப் பற்றி...

News image
மோஜ்தபா கமேனி - டிரம்ப்.- படம்: AFP
Updated On :17 மார்ச் 2026, 8:15 am

இணையதளச் செய்திப் பிரிவு

ஈரானின் புதிய உச்சத் தலைவராகத் தேர்வு செய்யப்பட்டுள்ள மோஜ்தபா கமேனி தன்பாலின ஈர்ப்பாளராகவும் இருக்கலாம் என்ற அமெரிக்க உளவுத்துறையின் தகவல்கள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அணுஆயுதக் கொள்கையைக் கைவிடக் கோரி ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் ஆகிய இரண்டு ராணுவங்களும் சேர்ந்து கடந்த பிப். 28 ஆம் தேதி நடத்திய கூட்டுத் தாக்குதலில் ஈரானின் மதகுரு உச்சத் தலைவர் அலி அயத்துல்லா கமேனி, அவரது மனைவி, மகள், மருமகன், பேத்தி உள்பட ஈரானின் ராணுவத் தலைவர்கள் 50-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர்.

அதனைத் தொடர்ந்து ஈரானின் புதிய தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா கமேனி தேர்வு செய்யப்பட்டார். அமெரிக்க தாக்குதலுக்குப் பின்னர் இதுவரை அவர் மக்கள் முன்னிலையில் தோன்றாத நிலையில், அமெரிக்கா நடத்திய தாக்குதலில் மோஜ்தபா கமேனி, ஒரு காலை இழந்து விட்டதாகவும், அவர் தற்போது கோமா நிலையில் உயிருக்குப் போராடி வருவதாகவும் தகவல்கள் வெளியாகியிருந்தன.

மோஜ்தபா கமேனி கொல்லப்படாமல் உயிரிக்குப் போராடிக் கொண்டிருக்கலாம் என்றும் அவருக்குப் பதிலாக  ‘நோபோ’  எனப்படும் ரகசியப் பாதுகாப்புக் குழு அவருக்குப் பாதுகாப்பாகவும் போரை வழிநடத்தி வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த நிலையில், மோஜ்தபா கமேனி தன்பாலின ஈர்ப்பாளராக இருக்கலாம் என்றும் அமெரிக்க உளவுத்துறை அமைப்புகள் சந்தேகிப்பதாகவும், இந்தத் தகவலைக் கேட்ட அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் திகைத்துப் போய்விட்டதாகவும் தி நியூயார்க் போஸ்ட் நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.

வெள்ளை மாளிகையின் தகவலறிந்த வட்டாரங்களின் தகவல்களின்படி, டிரம்ப் மிகவும் ஆச்சரியப்பட்டதாகவும், அவர் உரக்க சிரித்தாகவும் அந்த செய்தியில் மேற்கோள் காட்டப்பட்டுள்ளது. வெள்ளை மாளிகைக்கு நெருக்கமானவர்களுக்கு அமெரிக்க உளவாளிகள் தெரிவித்துள்ளனர். இது பொய்யான தகவலாக இருக்க வாய்ப்பில்லை என்றும் கூறப்படுகிறது.

அமெரிக்க உளவுத்துறையின் தகவலின்படி, மோஜ்தபா கமேனி தனது சிறுவயது ஆசிரியருடன் நீண்டகால உறவில் இருப்பதாக கூறப்படுகிறது. அதேசமயம் அந்த நபர் கமேனி குடும்பத்தினருக்கு வேண்டியவர் எனக் கூறப்படுகிறது.

அலி அயத்துல்லா கமேனியின் அரசியல் வாரிசாகக் கருதப்பட்ட இப்ராஹிம் அரைசி 2024 ஆம் ஆண்டு ஹெலிகாப்டர் விபத்தில் கொல்லப்பட்ட பின்னரே மோஜ்தபா கமேனி மீதான தவறான தகவல்கள் பரப்படுவதாகக் கூறப்படுகிறது.

அதே தகவலில், மோஜ்தபா உடல்நலப் பாதிப்புகளால் இருந்ததாகவும், அவர் 30 வயதுக்கு மேல் திருமணம் செய்து கொண்டார் என்றும், அவர் சிகிச்சைக்காக அடிக்கடி லண்டனுக்கு சென்றதாகவும் கூறப்பட்டுள்ளது.

மிகவும் கடுமையான சட்டத் திட்டங்களைக் கொண்டுள்ள ஈரானில் தன்பாலின ஈர்ப்பு போன்றவை கடுமையான குற்றங்களாகக் கருதப்படுகிறது. இதனால், தலைமை மதகுருவின் குடும்பத்தில் அதற்கான சாத்தியக்கூறுகள் இல்லை என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கமேனி கொல்லப்பட்ட வான்வழித் தாக்குதலிலேயே மோஜ்தபாவின் மனைவி ஜாஹ்ரா அவரது மகன் முகமது பாஹேர் உள்ளிட்டோர் கொல்லப்பட்டதையும் உளவுத்துறை சுட்டிக்காட்டுகிறது.

summary

According to a report by the New York Post, US intelligence suggested Mojtaba may have had a long-term relationship with a man who served as his childhood tutor. The news outlet said the claim was revealed to it by two intelligence community officials and a person close to the White House.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.