மாணவர் பாரதிதாசனுக்கு கல்வி நிதி விடுவிக்கப்படும்! - அமைச்சர் வன்னி அரசுசென்னை குற்றப்பிரிவில் அன்பில் மகேஸ் ஆஜர்!தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு 16,577 ஆக உயர்வு! ஒரே நாளில் 244 பேர் பாதிப்பு!தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு 16,577 ஆக உயர்வு! ஒரே நாளில் 244 பேர் பாதிப்பு!‘பாஜகவும் தேர்தல் ஆணையமும் கூட்டு சேர்ந்து சதி’ - ராகுல் காட்டம்!

டிரம்ப்பின் நீரிணை! ஹோர்முஸை பெயர்மாற்றம் செய்து அமெரிக்க அதிபர் வெளியிட்ட வரைபடம்!

அமெரிக்க அதிபர் டிரம்ப் வெளியிட்டுள்ள ஹோர்முஸ் நீரிணையின் புதிய வரைபடம் குறித்து...

strait of Trump

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் வெளியிட்ட செய்யறிவு வரைபடம்... - Truth | Donald trump

Published On :

ஹோர்முஸ் நீரிணையை தனது பெயரின்படி மாற்றி புதிய வரைபடத்தை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் வெளியிட்டுள்ளார்.

அமெரிக்க மற்றும் இஸ்ரேலிய படைகளின் கூட்டுத் தாக்குதலைத் தொடர்ந்து வளைகுடா நாடுகளின் முக்கிய கட்டமைப்புகள் மீது ஈரானிய படைகள் தாக்குதல் நடத்தி வந்தன. மேலும், சர்வதேச எரிபொருள் விநியோகத்தின் முக்கிய பாதையான ஹோர்முஸ் நீரிணையை ஈரான் முடக்கியது.

இதனைத் தொடர்ந்து, பாகிஸ்தான் தலைமையில் இருதரப்புக்கும் இடையிலான அமைதிப் பேச்சுவார்த்தைகள் தோல்வியில் முடிந்தன. இதனால், ஹோர்முஸ் நீரிணை மற்றும் ஈரானிய துறைமுகங்களை அமெரிக்க கடற்படை முற்றுகையிட்டு வருகிறது.

இந்த நிலையில், ஹோர்முஸ் நீரிணையை தனது பெயரினால் "டிரம்ப் நீரிணை" எனப் பெயர்மாற்றம் செய்து செய்யறிவால் (ஏஐ) உருவாக்கப்பட்ட வரைபடத்தை அமெரிக்க அதிபர் டிரம்ப், கடந்த ஏப். 29 அன்று தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

ஏற்கெனவே, செய்தியாளர்கள் உடனான சந்திப்பில் ஹோர்முஸ் நீரிணையை டிரம்ப் நீரிணை எனக் குறிப்பிட்டு அதிபர் டிரம்ப் பேசியுள்ளார். இதையடுத்து, அவரின் இந்தப் புதிய பதிவுக்கு பல்வேறு தரப்பினரும் விமர்சனம் தெரிவித்து வருகின்றனர்.

முன்னதாக, சர்வதேச விவகாரங்களில் தனது தலையீட்டை உறுதி செய்வதற்காகவும் தனக்குப் புகழ் சூட்டும் விதத்திலும் செய்யறிவு புகைப்படங்கள் வெளியிடுவதை அதிபர் டிரம்ப் வழக்கமாகக் கொண்டுள்ளார்.

Summary

Trump has released a new map in which he has renamed the Strait of Hormuz after himself.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.