ஆசிய விளையாட்டில் 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில் வெள்ளி வென்ற இளவேனில் வாலறிவனுக்கு பிரதமர் மோடி வாழ்த்து ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் பதக்கம் வென்ற இளவேனில்: ஆளுநர் வாழ்த்து முதல்வர் ஏன் லண்டன் செல்ல வேண்டும்? அண்ணாமலை கேள்வி இந்தாண்டு இதுவரை 17,000 பேருக்கு டெங்கு பாதிப்பு- அமைச்சர் அருண்ராஜ் தமிழ்நாட்டில் நாளை 21 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு பட்டிமன்ற பேச்சாளராக மாறிய மு.க. ஸ்டாலின்: அமைச்சர் ராஜ்மோகன் விமர்சனம் விஜய்க்கு அவகாசம் அளிக்க வேண்டும்: பிரகாஷ் ராஜ்

ஹோர்முஸ் நீரிணை வழியாகச் செல்லும் கப்பல்களுக்குச் சுங்கக் கட்டணம்! - ஈரானிய எம்பிக்கள் பரிந்துரை!

ஹோர்முஸ் நீரிணை வழியாகச் செல்லும் கப்பல்களுக்குச் சுங்கக் கட்டணம் விதிக்கக் கூறி பரிந்துரைக்கப்பட்டுள்ளது குறித்து...

Iranian MPs recommend Tolls for ships passing through the Strait of Hormuz

ஹோர்முஸ் நீரிணை வழியாகச் செல்லும் கப்பல்களுக்கு சுங்கக் கட்டணம்... (கோப்புப் படம்) - ஏபி

Published On :

ஹோர்முஸ் நீரிணை வழியாகச் செல்லும் கப்பல்களுக்குச் சுங்கக் கட்டணம் விதிக்கக் கோரி, ஈரான் அரசுக்கு அந்நாட்டின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பரிந்துரைத்ததாகத் தகவல் வெளியாகியுள்ளது.

அமெரிக்க, இஸ்ரேலிய படைகளுக்கும் ஈரானுக்கும் இடையில் கடந்த பிப். 28 முதல் போர் நடைபெற்று வருகிறது. இந்தப் போரின் ஒரு முக்கிய வியூகமாக, ஹோர்முஸ் நீரிணையை ஈரான் படைகள் முடக்கியுள்ளன.

எண்ணெய்க் கப்பல்களின் முக்கிய வழிப் பாதையான ஹோர்முஸ் நீரிணை முடக்கப்பட்டதால், சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது. மேலும், தங்கள் அனுமதியின்றி அவ்வழியைக் கடக்க முயற்சிக்கும் கப்பல்கள் மீது ஈரானின் படைகள் தாக்குதல் நடத்தி வருகின்றன.

இந்த நிலையில், ஹோர்முஸ் நீரிணையைக் கடக்கும் கப்பல்களுக்குச் சுங்கக் கட்டணம் விதிக்கக் கோரி, ஈரானின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பரிந்துரைத்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஹோர்முஸ் நீரிணையைக் கடக்கும் எண்ணெய்க் கப்பல்களின் பாதுகாப்பிற்காகப் பாதிக்கப்பட்ட நாடுகள் தங்களது போர்க் கப்பல்களை அனுப்பவுள்ளதாக, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்தார். ஆனால், பெரும்பாலான நாடுகள் இந்த நடவடிக்கைக்கு மறுப்பு தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.

ஏற்கெனவே, ஹோர்முஸ் நீரிணை வழியாக அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் அவர்களின் ஆதரவாளர்களின் கப்பல்கள் ஒருபோதும் அனுமதிக்கப்படாது என ஈரானின் புதிய உச்ச தலைவர் ஆயதுல்லா மோஜ்தபா கமேனி அறிவித்துள்ளார்.

முன்னதாக, இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவின் கூட்டுத் தாக்குதல்களில் ஈரானின் தலைமை மதகுரு ஆயதுல்லா அலி கமேனி கடந்த பிப். 28 அன்று கொல்லப்பட்டார். இதையடுத்து, இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவுக்கு ஆதரவளிக்கும் வளைகுடா நாடுகள் மீது ஈரானின் படைகள் தாக்குதல் நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

Summary

Iranian lawmakers have recommended to impose tolls on ships passing through the Strait of Hormuz.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.