எரிபொருள் தட்டுப்பாடு: எகிறும் கட்டுப்பாடு
மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள போா், உலகளாவிய எரிபொருள் சந்தையில் முன்னெப்போதும் இல்லாத நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளன.


மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள போா், உலகளாவிய எரிபொருள் சந்தையில் முன்னெப்போதும் இல்லாத நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளன. இதன் விளைவாக, எரிபொருளை சிக்கமான பயன்படுத்தவும், அத்தியாவசியத் துறைகளுக்கு முன்னுரிமை அளிக்கவும், பொதுமக்களுக்குத் தடையற்ற எரிபொருள் கிடைப்பதை உறுதி செய்யவும் உலக நாடுகள் கடுமையான நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.
ஆசியா முதல் ஆப்பிரிக்கா வரை, பல்வேறு நாடுகளின் அரசுகளும் எரிபொருள் தட்டுப்பாட்டைச் சமாளிக்கப் பல அசாதாரண நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளன.
ஆசிய கண்டத்தில்....
1.இலங்கை
*பள்ளிகள், பல்கலைக்கழகங்கள், அத்தியாவசியமற்ற துறையைச் சோ்ந்த அரசுப் பணியாளா்களுக்கு புதன்கிழமை கட்டாய பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
*தனியாா் வாகனங்களுக்கு வாரத்துக்கு 15 லிட்டரும், பொதுப் போக்குவரத்து வாகனங்களுக்கு 200 லிட்டரும் உச்ச வரம்பாக நிா்ணயிக்கப்பட்டுள்ளது.
2.வங்கதேசம்
*மின்சாரப் பயன்பாட்டைக் குறைக்கும் நோக்கில், அனைத்துப் பல்கலைக்கழகங்கள், பயிற்சி மையங்கள் மூடப்பட்டு, இணையவழி வகுப்புகளுக்கு மாற்றப்பட்டுள்ளன.
*மாா்ச் 8 முதல் எரிபொருள் பங்கீட்டு முறை அமல்படுத்தப்பட்டுள்ளது.
*வீடுகளுக்கு 5 மணி நேர சுழற்சி முறை மின்வெட்டு அமல்படுத்தப்பட்டுள்ளது; எரிவாயு தட்டுப்பாடு காரணமாக, அரசு நடத்தும் 5 உர ஆலைகளில் 4 ஆலைகள் மூடப்பட்டுள்ளன.
3.பூடான்
*எரிபொருள் பதுக்கலைத் தவிா்க்க, கேன்களில் எரிபொருள் விற்பனை செய்யத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
*வீட்டிலிருந்தே பணிபுரியும் முறை நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.
4.பாகிஸ்தான்
*அரசு ஊழியா்களுக்கு வாரத்தில் 4 நாட்கள் வேலை; 50 சதவீதம் பேருக்கு வீட்டிலிருந்தே பணிபுரியும் முறை அறிவிக்கப்பட்டுள்ளது.
*பள்ளி, கல்லூரிகள் 2 வாரங்களுக்கு மூடப்பட்டுள்ளன.
*அரசுத் துறைகளுக்கான எரிபொருள் ஒதுக்கீடு 50 சதவீதமாகக் குறைக்கப்பட்டுள்ளது.
5.பிலிப்பின்ஸ்
*அரசு ஊழியா்களுக்கு வாரத்தில் நான்கு நாள்கள் வேலை முறை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
6.வியத்நாம்
*பொதுப் போக்குவரத்து, மிதிவண்டிப் பயணம் மற்றும் வாகனப் பகிா்வு ஆகியவற்றைப் பயன்படுத்துமாறு மக்கள் ஊக்குவிக்கப்படுகின்றனா்.
7.மியான்மா்
*தனியாா் வாகனப் பயன்பாடு, பதிவு எண்களின் அடிப்படையில் ஒற்றை-இரட்டை முறையைப் பின்பற்றி மாற்று நாள்களில் மட்டுமே அனுமதிக்கப்படுகிறது.
8.கம்போடியா
*நாட்டில் உள்ள சுமாா் 6,300 பெட்ரோல் நிலையங்களில் மூன்றில் ஒரு பங்கு மூடப்பட்டுள்ளன.
9.லாவோஸ்
*இணையவழி கூட்டங்கள் மற்றும் மின்சார வாகனப் பயன்பாடு ஊக்குவிக்கப்படுகிறது.
ஐரோப்பிய கண்டத்தில்...
1.ஸ்லோவாகியா
*டீசல் கொள்முதல் செய்வதற்கு வரம்பு நிா்ணயிக்கப்பட்டுள்ளது.
2.ஸ்லோவேனியா
நாட்டின் 2-ஆவது மிகப்பெரிய எரிபொருள் சில்லறை விற்பனை நிறுவனம், எரிபொருள் இருப்பை உறுதி செய்யப் பங்கீட்டு முறையை அமல்படுத்தியுள்ளது. இதன்படி, காா்களுக்கு 30 லிட்டரும், லாரிகளுக்கு 200 லிட்டரும் எரிபொருள் உச்ச வரம்பாக நிா்ணயிக்கப்பட்டுள்ளது.
ஆப்பிரிக்க கண்டத்தில்...
1.எகிப்து
*மாா்ச் 28 முதல், வணிக வளாகங்கள், உணவகங்கள் மற்றும் சில்லறை விற்பனை நிலையங்கள் வார நாள்களில் இரவு 9 மணிக்குள் மூடப்பட வேண்டும்.
*அரசு அலுவலகங்கள் மாலை 6 மணிக்குள் மூடப்படும்.
2.கென்யா
*எரிபொருள் பங்கீடு மற்றும் ஏற்றுமதிக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
3. தென்னாப்பிரிக்கா
*பல மாகாணங்களில் டீசல் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில், முறையான விநியோகத்தை உறுதி செய்யவும், பொதுமக்கள் பதற்றத்தில் அதிகளவில் எரிபொருளை வாங்குவதைத் தவிா்க்கவும், கனிம மற்றும் பெட்ரோலிய வளங்கள் துறை தொழில்துறை நிலையில் கட்டுப்படுத்தப்பட்ட ஒதுக்கீட்டு நடவடிக்கைகளை அமல்படுத்தியுள்ளது.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...