தமிழகத்தின் 17வது சட்டப்பேரவை கூடியது! தமிழகத்தில் 48 மணி நேரத்தில் உருவாகிறது குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதிஓராண்டுக்கு தங்கம் வாங்க வேண்டாம்: பிரதமர் மோடி!மேற்காசிய பதற்றம்: எண்ணெய் நிறுவனங்களுக்கு ஒரு நாளைக்கு ரூ.1,600 கோடி இழப்பு!அஸ்ஸாம் முதல்வராக ஹிமந்த விஸ்வ சர்மா மீண்டும் தேர்வு
/

கச்சா எண்ணெய் தட்டுப்பாடு: சீனாவில் எரிபொருள் விலை அதிரடி உயர்வு!

போர் காரணமாக பெட்ரோல் மற்றும் டீசல் தட்டுப்பாடு ஏற்படக்கூடும் என்ற அச்சம் நிலவி வருவது குறித்து...

News image

கோப்புப் படம்

Updated On :23 மார்ச் 2026, 9:02 pm IST

அமெரிக்கா - இஸ்ரேல், ஈரான் போர் காரணமாக, பெட்ரோல் மற்றும் டீசல் தட்டுப்பாடு ஏற்படக்கூடும் என்ற அச்சத்தின் விளைவாக எரிபொருள் விலையை சீனா அதிரடியாக உயர்த்தியது.

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை அதிகரித்துள்ள நிலையில், சீனாவின் தேசிய வளர்ச்சி மற்றும் சீர்திருத்த ஆணையம், இந்த தற்காலிக நடவடிக்கையை அறிவித்தது.

சர்வதேச எண்ணெய் விலையில் ஏற்பட்டுள்ள அசாதாரண உயர்வின் தாக்கத்தைக் குறைக்கவும், பயனர்கள் மீதான சுமையைக் குறைக்கவும், நிலையான பொருளாதாரச் செயல்பாடு மற்றும் சமூக வாழ்வாதாரத்தை உறுதி செய்யவும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக தேசிய வளர்ச்சி மற்றும் சீர்திருத்த ஆணையம் தெரிவித்தது.

விலை உயர்வுக்கு முன்னதாக எரிபொருள் நிலையங்களில் வாகன ஓட்டுநர்கள் வரிசையில் காத்திருந்து எரிபொருளை நிரப்பிச் சென்றுள்ளனர்.

பெட்ரோல் மற்றும் டீசல் விலையை டன் ஒன்றுக்கு 1,160 யுவான் ($168) மற்றும் 1,115 யுவான் ($159) அதிகரித்துள்ளதாக தேசிய வளர்ச்சி மற்றும் சீர்திருத்த ஆணையம் தெரிவித்தது.

கச்சா எண்ணெய் தேவையில், சுமார் 70 சதவீதத்திற்கு இறக்குமதியைச் சார்ந்துள்ளது சீனா என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.