அமெரிக்காவின் எஃப்-18 போர் விமானத்தை குறிவைத்துத் தாக்கியதாக ஈரானிய படைகள் உறுதிப்படுத்தியுள்ளன. இருப்பினும், இதுதொடர்பான விடியோ வைரலான நிலையில், இதனை போலியென அமெரிக்கா மறுப்பு தெரிவித்துள்ளது.
அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் கூட்டுத் தாக்குதல்களில், ஈரானின் தலைமை மதகுரு அயதுல்லா அலி கமேனி கடந்த பிப். 28 அன்று கொல்லப்பட்டார். இதையடுத்து, வளைகுடா நாடுகளில் அமைந்துள்ள அமெரிக்க ராணுவத் தளங்கள் உள்ளிட்ட கட்டமைப்புகள் மீது ஈரான் தாக்குதல் நடத்தி வருகிறது.
இந்தப் போரில், ஈரானில் ஆயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டதுடன், சௌதி அரேபியா, கத்தார் உள்ளிட்ட நாடுகளின் முக்கிய கட்டமைப்புகள் பலத்த சேதமடைந்தன.
BREAKING:
— Megatron (@Megatron_ron) March 25, 2026
ð®ð·ðºð¸ Iran has shoot down another US fighter jet
This time F-18 pic.twitter.com/0HbKjHXFzT
இதனைத் தொடர்ந்து, ஈரானுக்கும், அமெரிக்கா மற்றும் இஸ்ரேலிய படைகளுக்கும் இடையிலான இந்தப் போரை உடனடியாக முடிவுக்குக் கொண்டுவர வேண்டுமென பல்வேறு நாடுகள் வலியுறுத்தி வந்தன. இதனால், இந்தப் போர் கடந்த மார்ச் 23 அன்று தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.
இதையடுத்து, ஈரான் தனது அணுசக்தி திட்டங்களைக் கைவிட வேண்டும் மற்றும் ஈரான் அணு ஆயுதங்கள் தயாரிக்கக் கூடாது என்பதை உறுதிசெய்ய வேண்டும் உள்ளிட்ட 15 முக்கிய அம்சங்கள் கொண்ட அமைதித் திட்டத்தை அமெரிக்க அரசு முன்மொழிந்தது. இருப்பினும், அமெரிக்க தாக்குதலுக்கு மீது ஈரான் தொடர்ந்து வருகிறது.
இந்த நிலையில், அமெரிக்கா உயர்திறன் கொண்ட ராணுவ விமானங்களில் ஒன்றான எஃப்-18 போர் விமானத்தை ஈரானின் புரட்சிக்கர காவல்படை தாக்கி அழித்ததாக ஈரானின் தொலைக்காட்சி நிறுவனம் ஒன்று விடியோ வெளியிட்டுள்ளது. இந்த விடியோ வேகமாகப் பகிரப்பட்டு வரும் நிலையில், இந்த விடியோ போலியானது என்று அமெரிக்க தலைமை ராணுவக் கட்டுப்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.
மேலும், ஈரானின் நவீன வான் பாதுகாப்பு அமைப்புகளைப் பயன்படுத்தி, சாபஹார் பகுதிக்கு மேலே பறந்த எஃப்-18 ரக போர் விமானம் தாக்கப்பட்டதாக இஸ்லாமியப் புரட்சிகரப் பாதுகாப்புப் படை அறிவித்துள்ளது. இது முற்றிலும் உண்மைக்குப் புறம்பானது என்று குறிப்பிட்டுள்ளது.
ð«FALSE: The Islamic Revolutionary Guard Corps announced a U.S. F/A-18 fighter was struck over Chabahar using new advanced air defense systems.
— U.S. Central Command (@CENTCOM) March 25, 2026
âTRUE: No U.S. fighter aircraft have been shot down by Iran. pic.twitter.com/I25QFjYo0l
அமெரிக்காவின் ஆயுதப்படைக்கு ஈரான் அடிபணியும் என்ற நோக்கி, கடந்த பிப். 28 ஆம் தேதி தொடங்கிய போர் ஒரு மாதத்தை எட்டும் வரையில் முடிவுக்கு வராமல் தொடர்ந்து வருகிறது. பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருவதாக டிரம்ப் மீண்டும் மீண்டும் கூறிவந்தாலும், போர் தொடர்ந்து நடைபெறுவதாகவும் அமெரிக்காவை பழித்தீர்ப்போம் என்றும் ஈரான் சூளுரைத்துள்ளது.
இதற்கு மத்தியில் கடந்த வாரங்களில் அமெரிக்காவின் எஃப் 15 ரக போர் விமானம், எதிரிகளால் தாக்க முடியாத மின்னல் வேகத்தில் பயணிக்கக் கூடிய அமெரிக்க விமானப் படையின் அதிநவீன 5 ஆம் தலைமுறை போர் விமானமான எஃப் - 35 லைட்னிங் 2 ரக போர் விமானம் உள்ளிட்டவைகளையும் தாக்கி அழித்த விடியோக்களையும் வெளியிட்டிருந்தது.
Summary
Iran has also claimed responsibility for damaging a US F-35 stealth fighter, which made an emergency landing at an American base in the Middle East after sustaining suspected fire during a mission over Iranian airspace.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
ஈரான் மீதான தாக்குதல்கள் நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்பு
ஈரான் போருக்கு அமெரிக்கா ரூ. 3.6 லட்சம் கோடி செலவு!
ஜோர்டான் தாக்குதலுக்கு பதிலடி: ஈரான் படைகள் மீது அமெரிக்க அதிரடித் தாக்குதல்!

ஈரான் மீது தொடர்ந்து ஏழாவது இரவாக அமெரிக்கா தாக்குதல்; பாலங்கள், நீர் சுத்திகரிப்பு நிலையம் சேதம்
விடியோக்கள்
“பாஜகவின் குழந்தை தவெக”: திமுக மருது அழகுராஜ் விமர்சனம்



