விஜய்யை முன்வைத்து பல சூதாட்டங்கள்: தொல். திருமாவளவன்நாளைமுதல் கத்தரி வெய்யில் ஆரம்பம்!தில்லியில் ஏசி வெடித்து விபத்து: 9 பேர் பலி!நாடு முழுவதும் இன்று நீட் தோ்வுதபால் வாக்குச் சீட்டுகள் அனுமதியின்றி பிரிப்பு: தோ்தல் ஆணையத்திடம் திரிணமூல் புகாா்சித்திரை பெளா்ணமி விழா: திருவண்ணாமலையில் 300 டன் குப்பைகள் அகற்றம்மாநிலங்களவைக்கு கூடுதல் அதிகாரம் தேவை: டிஆா்எஸ் தலைவா் கவிதா வலியுறுத்தல்அரசின் முன் அனுமதியில்லாமல் காப்பீட்டுத் துறையில் 100% எஃப்டிஐ: மத்திய அரசு அறிவிக்கைதமிழகத்தில் 4.87 கோடி வாக்குகள் பதிவு: தோ்தல் ஆணையம் அதிகாரபூா்வ அறிவிப்புதமிழகத்தில் மே 8 வரை மழைக்கு வாய்ப்புமேற்கு வங்கத்தில் 285 வாக்குச்சாவடிகளில் மே 21-இல் மறு வாக்குப்பதிவு!ஐபிஎல்: சென்னை சூப்பர் கிங்ஸ் மீண்டும் வெற்றி - மும்பையை வீழ்த்தியது!
/

ஈரானிலிருந்து திரும்பும் வழியிலேயே கியூபாவைக் கைப்பற்றலாம்: டிரம்ப் பேச்சு!

ஈரானிலிருந்து திரும்பும் வழியிலேயே அமெரிக்கக் கடற்படை கியூபாவைக் கைப்பற்றிவிடும் என்று டிரம்ப் தெரிவித்ததைப் பற்றி...

News image

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப். - படம்: ஏபி.

Updated On :3 மே 2026, 7:51 am

ஈரானிலிருந்து திரும்பும் வழியிலேயே அமெரிக்கக் கடற்படை கியூபாவைக் கைப்பற்றிவிடும் என்று டிரம்ப் நகைச்சுவையாகத் தெரிவித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஈரான் - அமெரிக்கா இடையேயான போர்ப்பதற்றம் உலகளவில் அதிகரித்திருக்கும் நிலையில், ஈரானில் இருந்து தாயகம் திரும்பும் அமெரிக்க கடற்படை ஈரானிலிருந்து திரும்பு வழியிலேயே கியூபாவைக் கைப்பற்றிவிடலாம் என்றும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் நகைச்சுவையாகப் பேசியிருப்பது சற்று பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

ஈரானுக்கு எதிரான அமெரிக்காவின் தாக்குதல் நிறுத்தப்பட்டு பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகின்றன. போரை நிரந்தரமாக முடிவுக்குக் கொண்டு வந்து ஒப்பந்தம் மேற்கொள்வதற்கும், அணுசக்தித் திட்டங்களை நிரந்தரமாக கைவிடக் கோரியும் ஈரானுடன் அமெரிக்கா தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.

கியூபாவுடனான பதற்றத்துக்கு மத்தியில் டிரம்ப்பின் நகைச்சுவையான பேச்சுகள் மேலும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கின்றன.

வாஷிங்டனில் உள்ள பாம் கடற்கரை ஃபோரம் கிளப் நடத்திய ஒரு நிகழ்வில் டிரம்ப் பேசுகையில், “கியூபாவுக்குப் பிரச்சினைகள் இருக்கின்றன.

யுஎஸ்எஸ் ஆபிரகாம் லிங்கன் விமானம் தாங்கி போர்க்கப்பல் கியூபாவில் இருந்து சுமார் 100 யார்டுகள் தொலைவில்தான் நின்றுவிடும். அவர்கள் நன்றி, தோல்வியை ஒப்புக்கொள்கிறோம் என்று கூறிவிடுவார்கள்” என்றார்.

கியூபா அரசாங்கத்தில் தலைமையை மாற்றுவதற்காக அழுத்தம் கொடுக்கும் வகையில் டிரம்ப் நிர்வாகம் ஈடுபட்டு வருகிறது.

தனது கோரிக்கைகள் நிறைவேற்றப்படாவிட்டால், கியூபாவுக்கு எதிராக அமெரிக்கா ராணுவ நடவடிக்கை எடுக்கும் என்று டிரம்ப் மீண்டும் மீண்டும் எச்சரித்துள்ளார்.

கியூபாவின் பாதுகாப்பு எந்திரத்துடன் தொடர்புடைய நிறுவனங்கள், எரிசக்தி, சுரங்கம், நிதிச் சேவை மற்றும் பாதுகாப்பு உள்ளிட்ட துறைகளை குறிவைத்து தடைகளை விரிவுப்படுத்தும் நிர்வாக உத்தரவில் டிரம்ப் கையெழுத்திட்டதாக கூறப்படுகிறது. மேலும், விரைவில் கியூபா மீது அமெரிக்க தாக்குதல் நடத்த டிரம்ப் சூசகமாகத் தெரிவித்திருப்பது உலகளவில் பதற்றத்தை அதிகரித்திருக்கிறது.

Summary

Donald Trump joked in a Palm Beach speech that a US aircraft carrier could force Cuba to surrender on its way back from Iran. The remark came as his administration continued its months-long push for sweeping changes in Cuba and amid repeated military threats.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.