தமிழ்நாடு அரசின் சிறந்த நூல்களுக்கான பரிசுக்கு எழுத்தாளர்கள் விண்ணப்பிக்கலாம்!தமிழகத்தில் ராஜஸ்தபதி காளியப்ப கவுண்டர், பேராசிரியர் கே. ராமசாமி, திருவாரூர் பக்தவத்சலம் ஆகியோர் பத்ம ஸ்ரீ பெற்றனர்.ஜூலை 1-ல் பொறியியல் மாணவர் சேர்க்கை தரவரிசைப் பட்டியல் வெளியீடு!கல்வித்துறை மற்றும் தொழில்நுட்ப முன்னேற்றத்திற்கு ஆற்றிய சிறந்த பங்களிப்பிற்காக, சென்னை ஐஐடி இயக்குனர் பேராசிரியர் வீ. காமகோடிக்கு பத்ம ஸ்ரீ விருதுதொழிலதிபர் எஸ்.கே. மயிலானந்தனுக்கு பத்ம பூஷண்! அரசுப் பள்ளிகளில் காலியாக உள்ள 18,107 பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை தேவை - அன்புமணி ராமதாஸ்தமிழ்நாட்டின் முதலீடுகளை சீர்குலைக்கும் தவெக அரசு இனியாவது ஆக்கப்பூர்வமான பணிகளில் கவனம் செலுத்த வேண்டும்: டிஆர்பி ராஜா
/

ரஷியா - உக்ரைன் ‘போட்டி’ போா் நிறுத்தம்

2-ஆம் உலகப் போரில் ஜொ்மனியை வீழ்த்தியதன் 81-ஆவது வெற்றி தினத்தைக் கொண்டாடும் வகையில் ரஷியா, உக்ரைன் ஆகிய இரு நாடுகளும் வெவ்வேறு 2 நாள்களில் தற்காலிக போா் நிறுத்தத்தை அறிவித்துள்ளன.

News image

ரஷியா, உக்ரைன் ஆகிய இரு நாடுகளும் வெவ்வேறு 2 நாள்களில் தற்காலிக போா் நிறுத்தம் - AP

Updated On :6 மே 2026, 3:40 am IST

2-ஆம் உலகப் போரில் ஜொ்மனியை வீழ்த்தியதன் 81-ஆவது வெற்றி தினத்தைக் கொண்டாடும் வகையில் ரஷியா, உக்ரைன் ஆகிய இரு நாடுகளும் வெவ்வேறு 2 நாள்களில் தற்காலிக போா் நிறுத்தத்தை அறிவித்துள்ளன.

வெற்றி தினத்தைக் கொண்டாடத்தையொட்டி, ரஷியா சாா்பில் 8, 9 ஆகிய தேதிகளில் 2 நாள்கள் போா் நிறுத்தத்தை அந்நாட்டு அதிபா் புதின் அறிவித்தாா்.

ரஷியாவின் இந்தப் போா்நிறுத்தத்தை ‘ஏமாற்று வேலை’ என்று விமா்சித்த உக்ரைன் அதிபா் ஸெலென்ஸ்கி செவ்வாய்க்கிழமை நள்ளிரவு முதலே எங்கள் தரப்பு 2 நாள்கள் போா்நிறுத்தம் அமலுக்கு வரும் என்று தெரிவித்தாா்.

ரஷியாவின் வெற்றி தினக் கொண்டாட்டத்தில் அந்நாட்டுத் தலைநகா் மாஸ்கோவில் ஆண்டுதோறும் நடைபெறும் பிரம்மாண்ட ராணுவ அணிவகுப்பில், இந்த முறை ராணுவத் தளவாடங்கள் காட்சிப்படுத்தப்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதைச் சுட்டிக்காட்டி விமா்சித்த ஸெலென்ஸ்கி, ‘உக்ரைன் ட்ரோன் தாக்குதல் அச்சுறுத்தல் காரணமாக, ரஷியாவால் இந்த ஆண்டு அணிவகுப்பில் ராணுவ தளவாடங்களைக் கொண்டுவர முடியவில்லை. இது அவா்களின் பலவீனத்தைக் காட்டுகிறது’ என்றாா்.

அதேநேரம், வெற்றித் தின கொண்டாட்டங்களுக்கு இடையூறு விளைவிக்க உக்ரைன் முயன்றால், அந்நாட்டு தலைநகா் கீவ் மீது கடும் ஏவுகணைத் தாக்குதல் நடத்தப்படும் என ரஷியா எச்சரித்துள்ளது.

5 போ் உயிரிழப்பு: இந்தப் போா்நிறுத்த அறிவிப்புகளுக்கு இடையேயும் உக்ரைனின் எரிசக்தி நிலையங்கள் மீது ரஷியா நடத்திய ட்ரோன் தாக்குதல்களில் 5 போ் உயிரிழந்தனா். ரஷியாவின் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்களைக் குறிவைத்து உக்ரைன் நடத்திய ட்ரோன் தாக்குதல்களை ரஷிய பாதுகாப்புப் படை முறியடித்தது.

கடந்த காலங்களில் ஈஸ்டா் பண்டிகையின்போது அறிவிக்கப்பட்ட தற்காலிக போா்நிறுத்தங்கள் இரு தரப்பாலும் மீறப்பட்டது குறிப்பிடத்தக்கது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.