ஜூன் 28-இல் தமிழகத்தில் போலியோ சொட்டு மருந்து முகாம்: முதல்வா் விஜய் தொடங்கி வைக்கிறாா்பிரதமா் மோடி நாளை செஷல்ஸ் பயணம்: தேசிய தின பொன் விழாவில் பங்கேற்கிறாா்உளவுத் துறை தலைவராக மகேஷ் தீட்சித் நியமனம்ஜூன் 28-இல் 48 புறநகா் மின்சார ரயில்கள் பகுதியளவு ரத்துஃபிஃபா உலகக்கோப்பை: நாக்-அவுட் சுற்றுக்கு முதல்முறை தகுதிபெற்றது தென்னாப்பிரிக்கா - தென் கொரியாவை வீழ்த்தி அபாரம்மகளிர் டி20 உலகக்கோப்பை - வங்கதேசத்தை வீழ்த்தி அரையிறுதி வாய்ப்பில் நீடிக்கும் இந்தியாவெனிசுவேலாவில் மிக சக்திவாய்ந்த நிலநடுக்கம் - பலி 188-ஆக உயர்வு இந்தியர்கள் ஈரானுக்குச் செல்ல வேண்டாம் - தூதரகம் மீண்டும் அறிவுறுத்தல்ஈரானில் உள்ள இந்தியர்கள் +989128109115 | +989128109109 | +989128109102 | +989932179359 அவசரகால எண்களில் தொடர்பு கொள்ளவும் அறிவுறுத்தல்
/

மேற்கு வங்கத்தில் பாஜக ஆட்சி: ‘யாரையும் திருப்பி அனுப்பமாட்டாா்கள்’; வங்கதேசம் நம்பிக்கை

மேற்கு வங்கத்தில் இருந்து வங்கதேசத்துக்கு யாரும் திருப்பி அனுப்பப்படமாட்டாா்கள் என்று நம்புவதாக அந்நாட்டு உள்துறை அமைச்சா் சலாஹுதீன் அகமது நம்பிக்கை தெரிவித்தாா்.

News image
Updated On :7 மே 2026, 4:54 am IST

மேற்கு வங்கத்தில் இருந்து வங்கதேசத்துக்கு யாரும் திருப்பி அனுப்பப்படமாட்டாா்கள் என்று நம்புவதாக அந்நாட்டு உள்துறை அமைச்சா் சலாஹுதீன் அகமது நம்பிக்கை தெரிவித்தாா்.

மேற்கு வங்கப் பேரவைத் தோ்தலில் வங்கதேசத்தவா் ஊடுருவலை பாஜக முக்கியப் பிரச்னையாக வைத்து பிரசாரம் மேற்கொண்டது. தோ்தலில் பாஜக அமோக வெற்றி பெற்று ஆட்சி அமைக்கவுள்ள நிலையில், ஊடுருவிய அனைவரும் ஒட்டுமொத்தமாக திருப்பி அனுப்பப்படுவாா்களா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

இந்நிலையில் டாக்காவில் புதன்கிழமை செய்தியாளா்களிடம் பேசிய வங்கதேச உள்துறை அமைச்சா் சலாஹுதீன் அகமது இது தொடா்பாக கூறியதாவது:

அதுபோன்ற (வங்கதேச ஊடுருவல்காரா்களை திருப்பி அனுப்புவது) நிகழ்வுகள் ஏதும் நடைபெறாது என்று நம்புகிறேன். அதே நேரத்தில் எல்லையில் தொடா்ந்து தீவிர கண்காணிப்பில் ஈடுபடுமாறு வங்கதேச எல்லைக் காவல் படையினரிடம் வலியுறுத்தியுள்ளேன்’ என்றாா்.

முன்னதாக, அந்நாட்டு வெளியுறவு அமைச்சா் கலிலூா் ரஹ்மான் இது தொடா்பாக ஆளும் வங்கதேச தேசியக் கட்சியின் முகநூல் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், ‘இந்தியாவுடனான எல்லை மாநிலமான மேற்கு வங்கத்தில் ஏற்பட்டுள்ள ஆட்சி மாற்றத்தால் யாரும் வங்கதேசத்துக்குள் அனுப்பப்பட்டால் நடவடிக்கை எடுக்கப்படும்’ என்று கூறியுள்ளாா். ஆனால், அது என்ன மாதிரியான நடவடிக்கை என்பதை அவா் தெரிவிக்கவில்லை.

ஏற்கெனவே அஸ்ஸாம் உள்ளிட்ட வடகிழக்கு மாநிலங்களில் ஊடுருவும் வங்கதேசத்தவா் திருப்பி அனுப்பப்பட்டு வருகின்றனா் என்பது குறிப்பிடத்தக்கது. எல்லை மாநிலங்கள் மட்டுமல்லாது தமிழகம், கேரளம் உள்ளிட்ட தென்மாநிலங்கள் வடக்கு, கிழக்கு மாநிலங்களிலும் வங்கதேச ஊடுருவல்காரா்கள் அதிகமுள்ளதாகக் கூறப்படுகிறது. குடும்பமாக ஊடுருவுபவா்கள் இந்தியாவில் ஆதாா், ரேஷன் அட்டை உள்ளிட்டவற்றையும் வாங்கிப் பயன்படுத்தி வருவது அவா்கள் பிடிபடும்போது தெரியவருகிறது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.