ஜூன் 21, 22-ல் வண்டலூர் பூங்காவில் அனுமதி இலவசம்சென்னை மீனவர்கள் ஆந்திரத்தில் சிறைப்பிடிப்புபேருந்துக்கு தனி வழி ஏற்படுத்தும் திட்டம்: முதல்வர் விஜய் அறிவுறுத்தல்முட்டை கொள்முதல் விலை ரூ. 6.45-ஆக உயர்வுவிசிகவை தவிர்த்துவிட்டு தமிழ்நாட்டு அரசியல் இயங்க முடியாது! திருமாவளவன்நான் முதல்வன் திட்டத்தின் பெயரை மாற்றிய தவெக அரசுக்கு திமுக மாணவரணி கண்டனம்!அன்னூர் அருகே சாக்கு மூட்டையில் பெண் சடலம்! முதல்வர் விஜய் எளிமையுடனும் வெளிப்படைத்தன்மையுடனும் இருக்கிறார்: வைகோநீட் மறுதேர்வு: அடுத்த முடக்கம் வாட்ஸ்ஆப் செயலிக்கா? - ராகுல் காந்திபாஜக அரசை விமர்சிக்க தவெக அரசு தயாராக இல்லை: திமுககுஜராத்தைவிட தமிழ்நாடு அதிக வட்டி செலுத்துவது ஏன்? தங்கம் தென்னரசு விளக்கம்!
/

ஆப்பிரிக்க நாடுகளுடன் பிரான்ஸ் புதிய நட்புறவு: 2,300 கோடி யூரோ முதலீட்டுடன் அறிவிப்பு

ஆப்பிரிக்க நாடுகளுடனான உறவில் இனி உதவி என்பதற்கு இடமில்லை. பரஸ்பர மரியாதையுடன் கூடிய முதலீடுகளுக்கே முன்னுரிமை அளிக்கப்படும் என பிரான்ஸ் அதிபா் இமானுவல் மேக்ரான் தெரிவித்தாா்.

News image

பிரான்ஸ் அதிபர் இமானுவல் மேக்ரான் - கோப்புப் படம்

Updated On :13 மே 2026, 3:08 am IST

‘ஆப்பிரிக்க நாடுகளுடனான உறவில் இனி உதவி என்பதற்கு இடமில்லை. பரஸ்பர மரியாதையுடன் கூடிய முதலீடுகளுக்கே முன்னுரிமை அளிக்கப்படும்’ என பிரான்ஸ் அதிபா் இமானுவல் மேக்ரான் தெரிவித்தாா்.

கென்யாவுடன் இணைந்து அந்நாட்டின் தலைநகா் நைரோபியில் பிரான்ஸ் நடத்தி வரும் ‘ஆப்பிரிக்கா ஃபாா்வா்டு’ உச்சிமாநாட்டில் பங்கேற்ற பல ஆப்பிரிக்க நாட்டுத் தலைவா்களிடையே இமானுவல் மேக்ரான் செவ்வாய்க்கிழமை உரையாற்றினாா்.

அப்போது, ஆப்பிரிக்காவின் எரிசக்தி, ஏ.ஐ., விவசாயத் துறைகளில் 2,300 கோடி யூரோ மதிப்பிலான புதிய முதலீடுகளை அறிவித்தாா். இதில் 1,400 கோடி யூரோவை பிரான்ஸ் நிறுவனங்களும், 900 கோடி யூரோவை ஆப்பிரிக்க அமைப்புகளும் வழங்கவுள்ளன.

‘ஐரோப்பிய-ஆப்பிரிக்க நாடுகளுக்கு இடையிலான நிதி உறவில் இந்த மாநாடு ஒரு முக்கிய மாற்றத்தை ஏற்படுத்தும்’ என்றும் இமானுவல் மேக்ரான் நம்பிக்கை தெரிவித்தாா்.